Saturday 23 March 2019

கவுண்டர்களின் திருமண முறை

கவுண்டர்களின் திருமணங்கள் விமர்சையாக நடக்கும். பிறமொழிக் கலப்பு இன்றியே கொங்கு வேளாளர் மணவினைகள் காலங்காலமாய் நிகழுகின்றன. இந்தச் சிறப்பைத் தமிழகத்தின் பிறபகுதித் திருமணங்களில் காணுதல் அருமை. கொங்கு வேளாள இனத்தை சேர்ந்த 'அருமைப்பெரியவர்' என்பவர் திருமணத்தை நடத்துவார். இவரை அருமைக்காரர் என்றும் அழைப்பர். அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும். அவரவர் தேவைக்கேற்ப கொங்கு சிவபிராமணர்களையும், குலகுருக்களையும் மங்கிலியம் என்ற தாலிபூட்டும் பொழுது வைப்பதாக கொங்கு மங்கல வாழ்த்திலுள்ளது.
கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

என்று அப்பாடல் தொடங்கும். கொங்கு வேளாளரின் திருமணம் மூன்று நாட்களும், பெண் வீட்டிலும் நடக்கும்.நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.
முதல் நாள் (நாள் விருந்து) - இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள்.
இரண்டாம் நாள் (கலியாண நாள் அல்லது முகூர்த்த கால்) - இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழை, தென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர். அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர். முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும். பொதுவாக ஆல மரம், அரச மரம், பாலை மரங்களில் இது வெட்டப்படும். காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும். ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர்.
இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர். இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள். நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்து, மஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர். முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர்.
இரண்டாம் நாள் (கங்கணம் கட்டுதல் ) - அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார்.
இரண்டாம் நாள் (நிறைநாழி செய்தல்) - வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்து, நூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர். இது நிறைநாழி எனப்படும். இதனை ஒரு பேழையில் வைப்பர், அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார்.
இரண்டாம் நாள் (இணைச்சீர்) - இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும். மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார், இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார். இதனுள் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும். சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார். அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார். பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார். இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரி) கொண்டு வரும் கூறைப்புடவையைத் தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும்.
மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார். தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்று, மணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர்.
மூன்றாம் நாள் (முகூர்த்தம்) - இதை தாலி கட்டு என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க, மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல நாணைக் கட்டுவார்.[28]

நன்றி ta.wikipedia.org

காடை குலம் வரலாறு

காடைகுலம்
கொங்குவேளாளர் குலங்களில் முதன்மை வாய்ந்த சில குலங்களில் காடை குலமும் ஒன்று. கொங்கு நாடெங்கும் பரவலாகவும், எண்ணிக்கையில் மிகுதியாகவும் உள்ளவர்கள் காடை குலத்தினர். கவுண்டரில் பாதி காடை, என்று கூறும் அளவிற்கு அவர்கள் தொகையில் மிகுதியாக வாழ்கின்றனர்.
மூவேந்தராலும், பின்னர் தமிழகத்தை ஆட்சிபுரிந்த பல மரபு அரசர்களாலும், பாராட்டிய பெருமை அளிக்கப் பெற்றவர்கள் காடை குலத்தினர். பிற சமூகத்திற்கும் மதிப்பளித்த சமரசம் உடையவர்கள். கொங்குச் சமுதாயத்தில் முதல்வராக எண்ணபபட்டவர்கள். கொங்குநாட்டுச் சமுதாயங்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களை முன்னின்று நடத்திவைத்துச் சாட்சிக் கையொப்பமிட்ட சாபுடையேர். புலவர்களை ஆதரித்துப் புகழ் கொண்டவர்கள்.
அரசர், கவலர், மன்னர், சிந்தாமணி, தண்டித்துரை என்றெல்லாம் இலக்கியங்களில் புகழப்பட்டவர்கள். அன்னதானம் செய்த ஆறவோர். நாடு மதித்த நல்லோர், தம் காணியையும், தம் நாட்டு எல்லையையும் காத்தளிக்கும் வள்ளல்கள், இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்கும் காரணமானவர்கள் காடை குலத்தினர்.
காட குலமா ?
காடை குலத் தோன்றல் கோபி காலைக்கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் முனைவர் அரங்கசாமி அவர்கள் தம்முடைய பூந்துரை நாட்டுக் காட கூட்டக் கொங்கு வேளாளர் வரலாறு என்றும் நூலில் காடு கெடுத்து நாடாக்கிய கூட்டமே காட கூட்டம் என்று எழுதியுள்ளார்கள். இடைக்காடர், பூங்காடர், காடந்தை முதுலிய சில பெயர்களையும் ஆதரமாக ஆதற்கு எடுத்துக்காட்டியுள்ளார்கள்.
காடு திருத்தியதால் பெயர் அமைந்திருந்தால் காட்டுக்கூட்டம், காட்டுக்குலம், காட்டுக்கோத்திரம் என்று பெயர் அமைந்திருக்குமே தவிரக் காட கூட்டம் என ஆக வழியில்லை. இடைக்காடர் முதுலிய பெயர்களில் வரும் காடர், காடன் முதலிய பெயர் வழக்கு தமிழ்நாடடில் உள்ளன என்பது உண்மை. ஆனால் அப்பெயர்களுக்கும் கொங்கு வேளாளர்களுக்கும் தொடர்பில்லை. எனவே மக்கள் வழங்கிவரும் காடை குலம் என்பதே சரியானதாகும். காடு கெடுத்து நாடாக்கிய தன்மை கொங்கு வேளார்கட்குப் பொதுவானதாகும். காடை குலத்தாருக்கு மட்டுமே உரியதாகக் கூறச் சான்றில்லை.
கடவர் குலமா ?
திருப்பூர் க. பழனிச்சாமிப் புலவர் தாம் எழுதிய கொங்குச் செல்வி, என்னும் நூலில் காடை குலத்தை நூல் முழுவதும் குலம் என்றே அழைக்கிறார். அது மட்டும் இன்றி கொங்கு நாட்டுக் காடை குலத்தாரைப் பல்லவ மன்னர் வழியினர் என்று கூறுகிறார்.
கொங்கு நாட்டு ஆவணங்கள் எவற்றிலும் காடவர் என்ற பெயர் பயின்றி வரவில்லை. காளிங்கராயன் என்ற பெயரோடு இணைந்து கச்சிராயன், காடவராயர் என்ற அரசியல் தலைவர்கள் பட்டப்பெயர் மட்டும் கல்வெட்டுக்களில் வருகிறது. அவர்களுக்கும் காடைகுத்துக்கும் தொடர்பில்லை.
பல்லவர்கள் வேறு மொழியினர். பாரத்வாஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். ஸ்கந்தவர்மனையும், சிம்மவிஷ்ணுவையும் எப்படிக் காடை குலத்தோடு தொடர்பு படுத்துவது ? காடை குலத்தாருக்கும் காடவர் ஆகிய பல்லவர்கட்கும் தொடர்பும் கிடையாது. காடை கலத்தாரைப் பல்லவரோடு தொடர்பு படுத்துவது பெருமையும் ஆகாது.
இலக்கண விதி :
பண்ணன், கீரன் ஆகிய குல முதல்வர்களால் ஏற்பட்ட பண்ணகுலம், கீர குலம், ஆகிய பிற்காலத்தில் பண்ணைகுலம், கீரைகுலம் என்று அழைக்கப்பட்டன. அதே போலக் கூறை குலம், ஆந்தைகுலம், தோடைகுலம், மாடை குலம், சாத்தந்தை குலம், எண்ணை குலம் குலப்பெயர்கள் காலப்போக்கில் சில இடங்களில் கூறகுலம், ஆந்த குலம், தோடகுலம், மாடகுலம், சாந்ததந்த குலம், எண்ண குலம் என்று அழைக்கப்பெற்றுள்ளன.
காடை குலம், காட் குலம் இரண்டிற்கும் பேச்சு வழக்கில் அதிக வேறுபாடு இல்லை. ஐகாரம் மொழி மூவிடத்தும் மாத்திரை குறைந்து வரும் என்பது விதி. அதன்படி காடைகுலம் என்பதும் ஐகாரம் ஒலி குறைந்து காடகுலம் என் வழகங்கியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இரண்டும் ஒன்றே என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள் மூலம் காடைகுலம், காடகுலம் ஒன்று என்றே அறிகிறோம்.
பல்வேறு வழக்கு :
காடைகுலத்தைக் காடகுலம், காடர் குலம், காடான் குலம், காடன் குலம் என்று பல இடங்களில் பல்வேறு மக்கள் அழைத்து வருகின்றனர். எப்படி அழைக்கப்பட்டாலும் இவை ஒரே குலமே தவிர வேறு குலங்கள் ஆகாது.
ஆவணங்களில் :
தனிப்பாடல், இலக்கியம், காணிப்பாடல் கல்வெட்டு, செப்பேடு, ஓலைப்பட்டயம் ஆகிய எல்லா ஆவணங்களிலும் பெரும்பாலும் காடைகுலம் என்று மட்டுமே எழுதப்பட்டிருப்பதைக் காணுகிறோம். புலவர்களும் சமூகப் பெரியோர்களும் காடை குலம் என்றே அழைத்துள்ளனர்.
தனிப்பாடலில் காடைகுலம்
கம்பர் பாடியதாக வழங்கும் தனிப்பாடல் ஒன்றில்
தூரன் ஆந்தை காடைகுலன்
துலங்கு முடியன் ஓதாளன்,
என்று வருகிறது.
இளம்பிள்ளை ஊர் பற்றிய காணிப் பாடலில்
செல்லாண்டி அம்மனுடன் சின்னம்மனைச் சேவிக்கும்
வல்லோனாம் காடைகுல வண்மையுளான்,
எனக் காடை குலம் குறிக்கப்படுகிறது. அதே ஊர் பற்றிய வேறு பாடலோன்றில் கீழ்வருமாறு குறிப்புரை வருகிறது.
வெள்ளைப் பாலூட்டும் விளங்கும்இளம் பிள்ளைநகர்ச்
செல்லப்பா காடைகுல சிதகிரிசிந்தாமணியே!
என்பது அப்பகுதியாகும்.
இலக்கியங்களில் காடைகுலம் :
பூந்துறைப் புராணத்தில் பூந்துறைக் காடை விநாயகருக்கு வணக்கம் கூறும் பகுதியில் கோடைவிநா யகன்பெற்ற குமரவேள் முன்வந்து
குலவும் தெய்வக்
காடைவிநா யகன்பதத்தை எமதுளத்தில் கண்டநலம்
கனிந்து வாழ்வாம்
என்ற பாடல் பகுதி காணப்படுகிறது.
கொங்கு மண்ட சதகத்தில்
ஆடையும் முத்தும் அணிமார்ப சோழன்
அகளங்கன்முன்
மேடை புகழ்ந்து வரும்புல வோரை
விழந் தழைத்துக்
காடை குலாதிபன் பூந்துறை நாடன்
கனகச் செல்வி
மாடையும் தெய்வ அமுதளித் தான்கொங்கு
மண்டலமே
என்ற பாடலில் பூந்துறைக் காடை குலாதிபன் ஒருவர் புகழப்படுகிறார்.
ஓதாளர் குறவஞ்சியில் குலங்களத் தொகுத்துக் கூறும் பகுதியில்,
மாவலர் பண்ணர் மாடை காடை
என்று காடை குலம் குறிக்கப்படுகிறது.
காணிப்பாடல்களில் காடைகுலம் :
காடை குலத்துக் காணிப்பாடல்களில் பின்வரும் தொடர்கள் காணப்படுகின்றன.
வன்னிபூ பதிஉதவு செல்லயன் காடைகுல மகராசர்,
போதமிகு காடைகுல மகராசர்,
அரசர்மனம் மகிழவரும் காடைகுல மேரு.
காடைகுல மேருவென அனதான வீடனே
அன்புபெறு காடைகுல செல்வா ரணவாசி
அடையவர் பணிசிங்கமே
மங்கலப் பரணியில் வென்றசெல் லப்பனே
வண்மையுள காடைகுலனே
கல்வெட்டுக்களில் காடைகுலம் :
ஈரோடு பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயில் கல்வெட்டில், பூந்துரையில் மேலைச் சாகாடைகளில் அப்பியான் என்ற தொடர் காணப்படுகிறது. பூந்துறை, ஈரோடு தொண்டீஸ்வரர் கோயில் கல்வெட்டுக்களிலும் காடைகுலம் என்ற தொடரே பயின்று வருவதைக் காணுகின்றோம்.
செப்பேடுகளில் காடைகுலம் :
நாராணபுரம் செப்பேட்டில்
பூந்துறைக் காடைகுலம் பொன்னக் கவுண்டன், என்றும்,
பாசூர்ச் செப்பேட்டில்,
மேல்கரைப் பூந்துறை நாட்டில் காடை குலத்தில் சின்னாக் கவுண்டர், என்றும்,
பெருந்துறை சாகாடை கோத்திரம் செல்லப்ப கவுண்டர், என்றும்
குறுப்பு நாட்டுச் செப்பேட்டில்
பூந்துறை நாடு காடைகுலத்தில் அவனாசி
முத்தணக் கவுண்டர், என்றும் குறிக்கப்பட்டுள்ளன.
ஓலைப்பட்டயங்களில் :
கொங்கு காணியான பட்டயத்தில்
காடை குலத்தில் செங்காளியப்ப கவுண்டர், என்றும்
கத்தாங்கண்ணிப் பட்டயத்தில்
சுந்தரபாண்டிய நல்லூர் காடை குலத்தில் முத்தய கவுண்டர், என்றும்,
முடவாண்டி பட்டயத்தில்
காவலன் ஆன காடை குலேசன்
தாரணி மதிக்கும் தண்டிகைத் துரையாண், என்றும்
காங்கேய நாட்டு ஊர்த்தொகைப்பாடலில்
சம்பர்மிகு கீரனூர் தன்னில்வளர் ஆதியை
கவுபாக்கிய அந்துவ குலனை
தளிரிலது கீரை நற் காடைபெரும் விலையனை
தர்மமிகு தேவேந்திரனை என்று குறிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பல்வேறு சான்றுகளால் காடைகுலம் என்ற வழக்கே பெரிதும் உள்ளதை நாம் அறிகிறோம். காடை குலம் என்று அழைப்பதே பெருமையும், சிறப்பும் வரலாற்று உண்மையும் ஆகும்.
கொங்கு எங்கும் காடை குலம் :
காணிப்பாடல்களில் குறிப்பிட்ட ஊர்களேயல்லாமல் பல ஊர்களில் காடை குலத்தூர் பல்கிப் பரவி வாழ்ந்து வருகிறார்கள். முக்கியமான காணியூர்களைக் கொண்டு அவர்கள் அவ்வூர் அடைமொழிகளுடன் அழைக்கப் பெறுகிறார்கள்.
ஆத்தூர்க் காடை பூந்துறைக்காடை கீரனூர்க்காடை பில்லூர்க் காடை
அரசூர்க்காடை வள்ளியறச்சல் காடை பெருந்துறைக்காடை பாப்பினிக்காடை
அன்னூர்க்காடை கோனூர்க் காடை பவுத்திரக்காடை ஆனங்கூர்க் காடை
தோழூர்க்காடை வையப்பமலைக்காடை கூடச்சேரிக் காடை
செருக்கலைக்காடை மேலைக்காடை கீழைக்காடை
என 18 வகையாக அழைக்கப்பட்டாலும் எல்லாக் காடைகளும் ஒன்றேயாகும்.
பனங்காடை என்பது காடையிலிருந்து வேறுபட்ட தனிக்குலம், அவர்களும் ஆத்தூர்க் காணியாளர்களாக குறிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காணிப்பாடல்களிலும் ஆத்தூர் குறிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை மடத்துப் பாளையம் செப்பேட்டில் காடை, காடான் குலம் பற்றிய சில குறிப்புகள் வருகின்றன. காடான் குலத்தினர் தங்களைக் காடை குலத்தார் என்று அழைத்துக் கொண்டதைப் பெருந்துறைக் காடை குலத்தார் கடுமையாக ஆட்சேபிக்கின்றனர்.
காணி ஊர்கள்
புகழ்பெற்ற காடை குலம் :
அன்னக்கொடி கட்டி ஏழை எளியவர்களையும், இரவலர்களையும் வருக, வருக என வரவேற்று அவர்கட்கு இன்முகத்துடன் அறுசுவை உண்டியும், ஆடையும், பொன்னும், மணியும் அளித்துப் புகழ் கொண்டவர்கள் காடை குலத்தினர். சொல்லிரண்டு உரையாதவர், கற்றவர்க்கு உற்றதுணை, தாரணி மதிக்கும் தண்டிகைத்துரை, காருலவும் இனிதான காடை குலர், என்றெல்லாம் பலவாறு புலவர்களால் பாராட்டப்பட்டவர்கள். அரசரோடு ஒப்ப மதிக்கப்பெற்றவர்கள் காடை குலத்தினர். அவர்கள் வாழ்ந்த பழம்பெரும் பதிகள் யாவை? கவளை மாலையணிந்து மேழிக் கொடியேந்தி அவர்கள் செங்கோல் செலுத்திய பேரூர்கள் பலப்பல.
காணி ஊர்கள் :
காடை குலத்துக்கு மூன்று காணிப் பாடல்கள் கிடைத்துள்ளன. அவைகளில் முறையே பூந்துறை, தூசியூர், வள்ளி எறிச்சல் ஆகியவை முதன்மைப்படுத்தி கூறப்பட்டுள்ளன.
முதற் காணிப்பாடல் :
பூந்துறை, பெருந்தொழு, பவுத்திரம், ஆத்தூர், வெள்ளியனை, ஆதியூர், முளையாம்பூண்டி, புல்லூர், வாழவந்தி, புன்னம், இளம்பள்ளி, பட்டியலூர், கடையகுளம், மருதுறை, ஏழூர், தோழூர், கழனியூர், கீரனூர், கங்குப்பட்டி, வள்ளி எளிச்சல் ஆகிய சிறப்புமிகு ஊர்களைக் காடை குல்த்தார்களின் காணியூர்கள் என்று முதற்பாடல் விளக்குகிறது.
கன்னல்உயர் பூந்துறை பெருந்தொழு பவுத்திரம்
கருணைபெறும் ஆத்தூருடன்
கனகமுயர் வெள்ளியணை அதியூர் நன்னகர்
காரண் உறைந்தபதியும்
இன்னிலத் தினியமுனை யாம்பூண்டி புல்லூரு
இயல்வாழ் வந்திபுன்னம்
இளம்பிள்ளை பட்டியலூர் கடையகுளம் மருதுறையும்
ஏழூரு தோழூருடன்
சென்னல்செறி கழினியூர் கீரனூர் ஆண்மைமிகு
திறமையுள கங்குப்பட்டி
செல்வமிகு வள்ளிநகர்க் காடைகுல வள்ளல்கள்
தீர்க்கர சாட்சிபுரியும்
மன்னர்பணி யும்பெரிய நாயகி மனோன்மணியின்
மலரடியை மறவாதவர்
வன்னிபூ பதி உதவு செல்லயன் காடைகுல
மகராசர் காணியிதுவே!
இப்பாடலில் காடைகுலத்தார்கள் வள்ளல்கள் என்றும், மகராசர் என்றும் புகழப்பட்டுள்ளனர். அவர்கள் காணியில் உரிமை பெற்று வாழுவதை அரசாட்சி புரிதலாகவே கூறியுள்ளனர். அவர்கள் சக்தி வழிபாட்டில் உயர்ந்த சீலர்களாக விளங்கினர்.
இரண்டாம் காணிப்பாடல் :
இரண்டாம் காணிப்பாடல் தூசியூர், புல்லூர், தோழூர், மாவிரட்டி, சேமந்தூர், வெண்ணந்தூர், மங்கலம், தேவர்தொகை, ஆத்தூர், மோடமங்கலம், பூந்துறை, காகம், ஆலாம்பாடி, நசையலூர், கூடக்கரை, புன்னம், பெருந்துறை, வேம்பத்தி, சிறுநல்லூர், பட்டியலூர், இளம்பள்ளி, கீரனூர், பாட்டாலி, வள்ளி எறிச்சல், பார்ப்பதி ஆகிய ஊர்கள் காடை கலத்தாரின் காணியூர்கள் என்று கூறுகிறது.
கன்னல் செறி தூசியூர் புல்லூர் தோழூர்
கனமான மாவிரட்டி
கதித்திடும் சேமந்தூர் வெண்ணந்தூர் மங்கலம்
கனிவாத்தூர் தேவர்தொகையும்
மன்னவர் புகழ்மோட மங்கலம் இவையுடன்
வளமைபெறும் பூந்துறையுமாம்
வண்மைசேர் காகம் ஆலம்பாடி நகையனூர்
வளர்கூடக் கரையுமாம்
சென்னல்செறி புன்னம் பெருந்துறை வேம்பத்தி
சிறுநல்லூர் பட்டியலூர்
சியமான இளம்பிள்ளை கீரனூர் பட்டாலி
திறமான வள்ளிநகரும்
அன்னதரு வான பார்ப்பதி நகருக்கு
அதிபன் என வந்தசுமுகன்
அரசர்மனம் மகிழவரும் காடைகுல மேருவென
அவனிதனில் வருகாணியே!
காடைகுலப் பெருமக்கள் தத்தம் காணியூர்களுக்கு அதிபர் என்று சுட்டிக் காட்டிக் கூறப்பட்டுள்ளனர். அரசர் மனம் மகிழ வருகின்ற காடை குலத்தார் மேரு போல உயர்ந்தவர்கள்., புகழ்மிக்கவர்கள் என்று கூறப்பட்டுள்ளனர்.
மூன்றாம் காணிப்பாடல் :
வள்ளி எறிச்சல், பார்ப்பதி, ஆத்தூர், கீரனூர், ஆதியூர், பூந்துறை, பெருந்தொழு, பவுத்திரம், வெள்ளியணை, கழனியூர், ஏழூர், தோழூர், கங்குப்பட்டி, முளையாம்பூண்டி, புல்லூர், வாழவந்தி, புன்னம், இளம்பள்ளி, பட்டியலூர், கடையகுளம், மருதுறை ஆகிய ஊர்களைக் காடைகுலத்தார் காணியூர்கள் என்று கூறுகின்றன.
கன்னல்உயர் வள்ளிநகர் புகழ்பெறும் பார்ப்பதி
கருணைபெறும் ஆத்தூருடன்
கனகமுயர் கீரனூர் ஆதியூர் நன்னகர்
காரணர் உறைந்தபதியும்
நன்னர்சேர் பூந்துறை பெருந்தொழு பவுத்திரம்
நன்மைசெறி வெள்ளியணையும்
நலமான கழனியூர் ஏழூரு தோழூரு
நாட்டியலுயர் கங்குப்பட்டி
இன்னிலைத் திலகமுளை யாம்பூண்டி புல்லூர்
இயல்வாழ வந்திபுன்னம்
இளம்பிள்ளை பட்டியலூர் கடையகுளம் மருதுறை
இவைபதியில் அரசுபுரியும்
பொன்னின்மே ழிக்கதிபர் செங்குவளை அணிமார்ப்
பூமிபா லகரானவர்
போதமிகு காடைகுல மகராசர் வாழ்கின்ற
புகழ்பெருகு காணியிவையே!
இப்பாடலில் காடைகுலப் பெருமக்கள் பொன்னின் மேழிக்கு அதிபர் என்று போற்றிப் புகழப்படுகின்றனர். அவர்கட்குச் செங்குவளை மாலை உரியதெனக் கூறப்படுகிறது. பூமிபாலகர் என புகழப்படுபவர்கள் அரசர்க்கு ஒப்ப மதிக்கப்பெறும் பெருமை கொண்டவர்கள். அவர்கள் தம் காணியூர்களை ஆட்சி செய்து புகழ் கொண்டவர்கள்.
இம்மூன்று காணிப்பாடல்களிலும் ஆத்தூர் இடம் பெற்றிருப்பது அதன் பெருமையையும், ஆத்தூர்க் காடைகுலத்தாரின் தொன்மைச் சிறப்பையும் விளக்குகிறது.
ஊர்க்காணியாளர் பாடல்கள் – இளம்பள்ளி :
மேலே நாம் பார்த்த காணிப்பாடல்கள் காடை குலத்தாரின் பொதுவான எல்லா ஊர்களையும் கூறும் பொதுக் காணிப்பாடலாகும். இவையல்லாமல் தனித்தனி ஊர்களுக்கும் உரிய பல காணியாளர்கள் யார் யார் என்பதைத் தொகுத்துக் கூறும் சில காணிப் பாடல்களும் உள்ளன.
இளம்பள்ளி, வள்ளி எறிச்சல், கீரனூர், பாப்பிணி முதலிய ஊர் காணிப்பாடல்களிலும், சில சிறப்புப் பாடல்களிலும் அவ்வூர் காணியாளர்களான காடை குலத்தார் மிகவும் சிறப்பாகக் குறிக்கப் பெறுகின்றனர்.
செல்லாண்டி அம்மனுடன் சின்னம்மனைச் சேவிக்கும்
வல்லோனாம் காடைகுல வண்மையுளான் – நல்லோர்காண்
மாதவரும் சூழ்வானஞ் செட்டி ஆன் பொருநை
ஓதும் இளம்பிள்ளை ஊர்
என்பது இளம்பள்ளிக் காணிப்பாடலாகும்.
இளம்பிள்ளை நகரம் இளம்பள்ளி, எளம்பள்ளி என இன்று அழைப்படுகிறது. கீழ்க்கரை அரைய நாட்டின் 32 ஊர்களில் 18ஆம் ஊராகக் குறிக்கப்படுவது. அங்குள்ள செல்லாண்டி அம்மன், சின்னம்மன் ஆகிய தெய்வங்களை வணங்கிப் பேறு பெற்றவர்கள் இளம்பள்ளிக் காடை குலத்தினர் அவ்வூரில் வாழ்ந்த காடைகுல வள்ளல் செல்லப்ப கவுண்டர் புலவர்களுக்கு சிந்தாமணி போல வரையாது வாரி வழங்கும் வள்ளலாக விளங்கினார். அவரிடம் வந்து புவலர்களும், இரவலர்களும், தாங்கள் விரும்பிய பரிசில் பெற்றுச் சென்றனர்.
ஒரு புலவர் இளம்பள்ளிக் காடைகுலச் செல்லப்ப கவுண்டரைப் பற்றி ஒரு பாடல் பாடியுள்ளார்.
நில்லப்பா என்று சொல்லி நீவிலகி போனதென்ன
சொல்லப்பா என்மனைக்குச் சோறுமில்லை என்சீவன்
வெள்ளைப் பாலூட்டும் விளங்கும் இளம் பிள்ளைநகர்
செல்லப்பா காடைகுல சிதகிரிசிந் தாமணியே
என்பது அப்பாடலாகும். செல்லப்ப கவுண்டர் பரிசு தரக் காலதாமதமான போது பாடியது இப்பாடல். இந்தப் புலவருக்குச் செல்லப்ப கவுண்டர் மிகுதியான பரிசிலைக் கொடுத்திருக்க வேண்டும். நினைத்ததை நினைத்தவர்க்குக் கொடுக்கும் சிந்தாமணி என செல்லப்ப கவுண்டர் புகழப்படுகிறார்.
காங்கயேநாட்டுக் காணி ஊர்கள் :
காங்கேய நாட்டின் 14 தொன்மையான ஊர்களில் பட்டிலி, ஆலாம்பாடி, வள்ளி எறிச்சல், கீரனூர், பாப்பிணி, மருதுறை ஆகிய ஆறு ஊர்களாகக் காணியாகக் கொண்டவர்கள் காடை குலத்தினர். அவ்வூர்க் காணிப்பாடல்களில் காடை குலத்தினர் சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளனர்.
வள்ளி எறிச்சல் :
காங்கேய நாட்டின் இரண்டாவது ஊர்வள்ளி எறிச்சல். அவ்வூர்க்கு வில்லி, செல்லன், ஆந்தை, வண்ணக்கன், பில்லன், கண்ணந்தை, பூந்தை, காடை, கணக்கன், நீருண்ணியர் ஆகியோர் காணியாளர்கள். இதனை,
வள்ளிநகர் வில்லியைச்
செல்லனை ஆந்தை குலனை
செல்வவன் ணக்கனைப்
பில்லனைக் கல்லியது
சேர்ந்துவளர் கண்ணந்தையை
சிங்காரப் பூந்தையைக்
காடையைக் கணக்கனைத்
திகழ்பரவு நீருண்ணியைச்
சீரகத் தூர்கொண்ட செட்டியை …..
என்ற பாடல் பகுதி விளக்குகிறது.
கீரனூர் :
கீரனூர் காங்கேய நாட்டின் ஐந்தாவது காணியூ. மிகவும் தொன்மையான கீரனூரில் மூன்றாவது காணியாளர்கள் காடை குலத்தினர். இதனை,
சம்பர்மிகு கீரனூர் தன்னில்வளர் ஆதியை
சவுரியமிகும் அந்துவகுலனை
தன்னில்வளர் காடையை விலையன் தேவேந்திரன்
தர்மமிகு கீரைகுலனை
என்ற பழம் பாடல் விளக்குகிறது.
பார்பினி :
பாப்பினி காங்கேய நாட்டின் ஆறாவது ஊர். அக்கிராமத்தில் சிவாலயம், பெருமாள் ஆலயம் அமைந்துள்ள மடவளாகம் என்னும் பகுதி காங்கேய நாட்டின் பொதுத் தலம் என்று சிறப்பிக்கப் பெறும் சிறப்புக்கு உரியது.
பார்ப்பதி, பாற்பனி என்றும் அழைக்கப் பெறும் ஊர். தோடைகுலம், கண்ணந்தை குலம், காடைகுலம், கீரைகுலம், வண்ணக்கன் குலம், வான குலம் ஆகியோருக்கப் பாப்பினி காணியூராகும்.
பார்ப்பதித் தோடைகுல தீபனே
தந்திரமிகு கண்ணந்தையைத்
தனதான காடையைக் கீரைவண் ணக்கனைத்
தருவாண னைச் செட்டியை
என்பது பாப்பிணிக் காணியாளர் பாடலாகும்.
ஆலாம்பாடி :
காடைகுலத்துக் காணிப்பாடல் ஒன்றில் ஆலாம்பாடி காடை குலத்தார்களின் காணியூர்களில் ஒன்று கூறப்பட்டுள்ளது.
வண்மைசேர் காகம் ஆலாம்பாடி நகையனூர்
வளர்கூட்க் கரையுமாம்
என்பது அப்பாடல் பகுதியாகும்.
கருவூரில் சிறப்புப் பெற்ற காடைகுலம்
தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் உடையது கருவூர். சங்கப் புலவர்கள் பலர் வாழ்ந்த பழம்பதி. புகலூர் ஆறநாட்டார் மலையில் உள்ள பழந்தமிழ்க் கல்வெட்டில் கருவூர், கருஊர் என்று எழுதப்பட்டுள்ளது. சோழர் தம் தலைநகர் என்று சிறப்பித்து முடிசூட்டிக் கொள்ளும் நகரமாகச் சிறப்பித்து. அதனால் கருவூருக்கு, முடிகொண்ட சோழபுரம்!, முடிவழங்கு சோழபுரம்! எனப் பெயர் வழங்கியது.
கொங்குநாட்டுக் கருவூர் ஆதலின் இங்கு மூவேந்தர் நடமாட்டம் மிகுதியாக இருந்தது. இதனை அமராவதித் தொல்பொருட்கள் பலவும் மெய்ப்பிக்கின்றன.
ஒரு சமயம் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் கருவூரில் சிவாலயம் ஒன்றைக் கட்ட முற்பட்டனர். தகுந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. நாட்டின் மிகச் சிறந்த கட்டிடக்கலை வல்லுநர்களான சிற்பிகளைக் கொண்டு அவ்வாலயம் அமைக்க முற்பட்டனர்.
கோயில் பணிகள் மிகச் சிறப்புடன் நடைபெற்ற. பணிகள் முடிந்தவுடன் குடமுழக்கு விழாவுக்கும் ஏற்பாடு செய்தனர். குடமுழுக்கு விழாவின் ஒரு அங்கமாக கோபுரத்திற்கு கலசம் வைக்க முற்பட்டனர்.
வைத்த கலசம் நிற்கவில்லை. யார் யாரோ கலசம் வைத்துப் பார்த்தனர். ஏன்? மூவேந்தருமே கலசம் வைத்தும் கலசம் நிற்கவில்லை. யாவரும் வழி தெரியாது திகைத்தனர். யார் கலசம் வைத்தால் நிற்கும் என்று தீர ஆலோசித்தனர்.
ஒரு நாள் தெய்வச் செயலால் இறைவன் வாக்காக ஒருவர் கூறினார்.
மாதவம் ùய்த நம் தென்திசையில் கொங்குநாடு மிகவும் சிறந்தது. கொங்கு 24 நாடுகளில் பூந்துரை நாடு முக்கியமானது. பழம்பூந்துறை என்பது அப்பூந்துறை நாட்டைத்தான். மக்கள் முதலில் புகுந்து உறைந்தது பூந்துறை நாட்டில்தான். அப்பூந்துறை நாட்டின் காடைகுலத் தலைவர்களை முன்பே முவேந்தர்கள் முடிசூட்டிச் சிறப்பித்துள்ளனர். அப்படிப்பட்ட பூந்துறை நாட்டுக் காடை குலத்தார்களை அழைத்து அவர்களைக் கலசம் வைக்குமாறு கூறினால் கலசம் நிற்கும்.
என்று இவ்வாறு கூறக்கேட்ட மூவேந்தர்களும் பூந்துறை நாட்டுக் காடை குலத்தார்களை அழைத்து வருமாறு தம் அமைச்சர்கட்குக் கட்டளையிட்டனர்.
மூவேந்தர்களின் அமைச்சர்களும் பூந்துறை சென்று மேற்கண்ட செய்தியைக் கூறுல் அவர்களைக் கருவூர்ச் சிவலயத்திற்குக் கலசம் வைக்க அழைத்தனர்.
கோயிலில், அரசு மரியாதையுடன் பூந்துறைக் காடை குலத்தார் கருவூருக்கு அழைத்துவரப்பட்டனர். மூவேந்தர்கள் காடை கலத்தாருக்குச் சிறப்புகள் பல செய்து பூந்துறை நாட்டில் மூவேந்தர்களும் செய்த கோயில் திருப்பணிகளைக் கூறினர்.
பூந்துறைக் காடை கலத்தினர் இறைவனை வணங்கிக் கருவூர்ச் சிவலயக் கோபுரத்தில் கலசம் வைத்தனர். என்ன ஆச்சரியம், எவரும் வைத்து நில்லாத கோபுரக் கலசம் பூந்துறைக் காடை குலத்தினர் பூந்துறைக் காடைகுலத்தினர் வைக்க நின்றது. எல்லோரும் மகிழ்ந்தனர். மூவேந்தர்கள் மீண்டும் பூந்துறைக் காடை குலத்தார்களைப் பாராட்டி பெருமைப் படுத்தி விருதுகள் பல கொடுத்தனர். காடைகுலத் தலைவர் வாரணவாசிக் கவுண்டருக்குப் பட்டக்காரர்கட்கு இணையாக, மன்றாடி பட்டமும் தந்தனர்.
இந்த அரிய நிகழ்ச்சி நாடெங்கும் பரவியது. எல்லோரும் பூந்துறைக் காடை குலத்தாரின் பக்திப் பெருக்கைப் பாராட்டி மகிழ்ந்தனர்..
பூந்துறை புராணம் திருச்செங்கோடு மண்டகப்பாளையம் காளியண்ணக் கவிராயர் தாம் பாடிய பூந்துறைப் புராணத்தில் இந்த அரிய நிகழ்ச்சியைக் கூறியுள்ளார்.
பூந்துறைப் புராணம் நாட்டுப் படலம் 30 ஆம் பாடலில் இந்த நிகழ்ச்சியைப் புலவர் பாடியுள்ளார்.
மூவரையர் பசுபதியார்க்கு அன்பு கூர்ந்து
முந்தியகோ புரம்கட்ட முடிநில்லாமல்
காவலரும் மற்றவரும் பிடிமண் வைக்க
கலசம் நில்லாது இந்நாட்டைக் கருதித் தேடி
ஆவலுடன் இவர்கையால் கலசம் வைக்க
அவநிற்க மூவர்முடி அன்பாய்ச் சூட்டிப்
பூவலகில் கொங்கிலிரு பத்து நாட்டில் பூந்துறைநாடு அதிகம் எனப் புகன்றிட்டாரே!
என்பது அப்பாடலாகும்.
அன்று முதல் கருவூர் உள்ளிட்ட வெங்கால நாட்டில் கண்ட குலத்தாருக்கு மிகுந்த மரியாதையும் முதன்மையும், சிறபப்ளம் நடந்து வந்தது.
புலவர் பாடிய புகழ்
கொங்கு நாட்டுப் புலவர்கள்
நமது கொங்கு நாட்டில் தமிழ்ப் புலவர்கட்கு இருந்த பெரும் மதிப்பும் மரியாதையும் வேறு எந்த நாட்டிலும் இல்லை. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சிற்பி ஒருவனுக்கு இராசராச சோழன் வெற்றிலை மடித்துக் கொடுத்ததாகக் கூறுவர். ஆனால் தமிழ்ப் புலவர்கட்குப் பரம்பரையாக அடிமையாகப் பணிபுரிவோம் என்று பட்டயம் எழுதித் தந்தவர்கள் கொங்கு வேளாளர்கள் புலவர்கட்குப் பல்லக்கு சுமந்தும், எச்சில் காளாஞ்சி ஏந்தியும், செருப்புகளைத் தலை மீது வைத்துச் சுமந்தும் தம் பெருநன்றிப் பெருக்கினைக் காட்டியவர்கள் கொங்க வோளாளர்கள்.
திருமணம் போன்ற சுப காரியங்களில் புலவர்களை முன்னே நடக்க வைத்து அவர்கள் பின்னே சென்று சீர்கள் செய்துள்ளனர். புலவர் கொங்கு வேளாளர் திருமணங்களில் மங்கல வாழத்திசைத்து மங்கல வாழ்த்துப் பாடியபின் கம்பர் வாழியும், ஏரெழுத்துவதும், திருக்கை வழக்கமும் படித்துள்ளனர். கொங்கு வேளாளர் திருமணங்கள் இலக்கிய விழாக்களாகவே முன்பு நடைபெற்றுள்ளன. புலவர்கட்குப் பால், பழம், தாம் உண்ணும் உண்கலங்கில் அளித்து மகிழ்ந்தவர்கள் கொங்கு வேளாளர்கள்.
புலவர்களும் வேளாளர்களை நன்கு மதித்து வேளாளர்களிடம் மட்டும் வலக்கையை ஏந்திக் கொடை பெற்றுப் பிறரிடம் அவர் அரசர் ஆயினும் இடக்கையை ஏந்திப் பொருள் பெற்றனர். அரசர்கள் கொடுக்கும் யானை, நவமணி, பொன் குவியலைக் காட்டிலும் கொங்கு வேளாளர்கள் களத்தில் கொங்கு முறத்தால் அளந்து கொடுக்கும் கம்பு பெரியதென்று பாடினர். இவ்வகையில் காடை கலத்தினரைப் புகழ்ந்து புலவர்கள் பாடிய சில பாடல்களை காணலாம்.
மூவேந்தர் சூட்டிய முடி
மூவேந்தர்களும் வேளாளர் வீடுகளில் பெண் எடுத்தனர். வேளாளர்கள் மூவேந்தர்கட்கும் படைத்தலைமை பூண்டும், அமைச்சுப் பொறுப்பு வகித்தும் அரசர்கள் பகைவர்களை வென்று நல்லாட்சி நடத்த உதவினர். அந்த வகையில் பலர் மூவேந்தரிடம் சிறப்புப் பெற்றுள்ளனர்.
ஒருமுறை சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர், பெரிய குலத்துத் தலைவர், கொங்கு 24 நாடுகளிலும் பெரிய வீட்டுக்காரர். முதல்வர் என்று அழைக்கப்பட்ட வேணாடுடையார் அவர்கட்கும், வெள்ளோட்டில் பகைவர்களை வென்று. ஆட்சி நிறுவி கொங்கரின் புகழுக்கும் பெருமைக்கும் காரணமாக விளங்கிய சாத்தத்தை கலத்து உலகில் மன்றாடியார் என்று புகழ் பெற்ற உலகுமையாருக்கும், கொங்குச் சமுதாயத்திற்குத் தலைமை தாங்கிப் பகைவர்களை அழித்து 25 நாடுகளில் தலைமை ஏற்றுப் புலவர்களை ஆதரித்து இலக்கியப் புகழ்படைத்த பயிரகுலத்துத் தோன்றல் ஆனூர் சர்க்கரை மன்றாடியாருக்கும், புகழ் மிக்க பூந்துறைக் காடைகலத்துத் தலைவர் நண்ணவுடையாருக்கும் மூவேந்தர்கள் முடிசூட்டினர். ஒருகாலத்தில் இவர்கள் நால்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டு மூவேந்தரால் முடிசூட்டப்பெற்றனர்.
வேணாடுடையான் வெள்ளோடு உலகுடையான்
ஆனூர்க்குச் சர்க்கரை மன்றாடி-வேணுபுகழ்
நாவேந்து பூந்துறைசை நண்ணா வுடையார்க்கு
மூவேந்தர் சூட்டும் முடி.
என்ற பழம் பாடல் மூலம் அறியலாம்.
காடைகுல மேரு:
காடைகுல வள்ளல்களுல் ஒருவராக பழனிக்கவுண்டர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் இளம்பிள்ளை நகருக்குரியவர். கீரனூர், தோழூர், பூந்துறை ஆகிய ஊர்களிலும் அவருக்குத் தொடர்பு உண்டு. அவரிடம் பாடிப் பரிசில் பெற்ற புலவர் ஒருவர் அவரைப் புகழ்ந்த ஒரு பாடல் பாடியுள்ளார். அப்பாடலில்தான் புலவர் பழனிக்கவுண்டரைக் காடைகுல மேரு என அழைக்கின்றார். புலவர் காடைகுலப் பழனிக் கவுண்டர்மீது. தமிழ் மாலை. பாடிப் பல பரிசுகள் பெற்றுள்ளார். கற்றவர்க்கு உற்ற துணையாகவும், சொல்லிரண்டு உரையாதவராகவும் பழனிக் கவுண்டர் வாழ்த்துள்ளார். புலவர் பாடிய பாடல் வருமாறு.
காமனருள் பாலகன் முத்துமகராய்திட
கனமணிகள் தானசுதனே
காடைகுல மேருவென அனதான வீடனே
கற்றவர்க்கு உற்றதுணையே
ஆமனவை எந்தனிட தமிழ்மாலை கேட்டுநீ
ஆடையா பரணம் எல்லாம்
அட்டி சொல்லாமலே ஒரு பொதி கம்புடன்
அஞ்சுபொன் அருள்புரிகுவாய்
ராமனஞ் சகோதரி எழுவரம்மை செல்லாண்டி
லட்சமா தேவியுமையும்
நானிலத் தனில் உள்ள தேவாதி தேவரும்
நாள்தோறுனைக்காப்பதாய்
சோமவே இளம்பிள்ளை நகர்மேவுமருகனே
தூயனே கனயோகனே
சொல்லூரன் டுரையாத பழினிமக ராயனே
துரைகதப பரிநகுலனே!
என்பதாகும்.
அன்புபெறு காடைகுலன்
மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோயிலில் சேர, சோழ பாண்டியர்கள் மூவரும் கூடித் தம் நாட்டு எல்லைகளை பிரித்து நிர்ணயம் செய்தனர். சீனப் பெருஞ்சுவர் போல் அவர்கள் அமைத்த கோட்டைக் கரை இன்றும் நெடுந்தூரம் அப்படியே உள்ளது. மதுக்கரையில் சேர விநாயகர், சோழ விநாயகர், பாண்டிய விநாயகர் கோயில்கள் இன்றும் உள்ளன. மதுக்கரையிலிருந்துôன் கொங்கு வேளாளர்கள் கொங்கு நாடெங்கும் குடியேறினர். அதனால்தான் மதுக்கரைச் செல்லாண்டியம்மனை பிடிமண் எடுத்து நாடெங்கும் பிரதிட்டை செய்தனர்.
மூவேந்தர்கட்கும், மதுக்கரை வந்த அனைவருக்கும் உண்டி முதலியன தந்து உபசரித்தவர் காடைகுல வாரணவாசியின் முன்னோர்.
சோழன்முன்னாகவரும் சேரனும் பாண்டியன்
கோடுகரை பிரிக்கும் நாளில்
சொன்னமுதலிக்குமன் அன்னக்கொடி கட்டியே
சோறிட்டு நிலைமை பெற்று
வேழமுன் மணிபரபு பூச்சக்கர வாளமது
வெங்கல நன்னாட்டினில்
வெண்ணைமலை பகுதியில் தோழூர் இளம்பிள்ளை
மேன்மைபெறு பூந்துறைசையில்
வாழரசன் முன்னின்று நான் அரசன் நீயென்று
வாதிட்டு நின்சமூகம்
வரிசைபெறு தண்டியில் சுருட்டிதீ வட்டியும்
மவிலிநீர் பகுத்தரமதும்
ஆனித மகராயர் பூந்துறைதை நாட்டிலே
அதிக பேர் பெற்று வந்தாய்
அன்புபெறு காடைகுல செல்லவா ரணவாசி
அடையவர் பணிசிங்கமே!
என்ற பாடலில் புகழ்மிக்க பூந்துறைக் காடை குலத்திற்கும் ஆத்தூர்க் காடை கலத்திற்கும் இருந்த தொடர்பு குறிக்கப்பட்டுள்ளது. வெங்கலநாடு குறிக்கப்படுவதால் இதனை அறியலாம்.
கொங்கு மண்டல சதகத்தில் :
கொங்கு நாட்டுக்கு கார்மேகக் கவிஞர், வாழசுந்தரக் கவிராயர், கம்பநாத சுவாமிகள் ஆகிய மூவர் பாடிய மூன்று சதகங்கள் இருப்பது சிறப்புமிக்கதாகும். முதலிரண்டு சதகங்ககளில் இரு பாடல்கள் காடைகுலப் பெருமக்களைப் பற்றி உள்ளது.
இந்திரனோ என மன்னர்கள் எல்லாம் மதிக்கத் தக்க பெருமையுடையான் தாரமங்கலம் கெட்டி முதலியார். அவன் பெரும்படை வைத்துள்ளவன். அப்படிப்பட்ட கெட்டிமுதலியாரையே பொருது வெற்றி பெற்றவர் பூந்துறை வாரணவாசிக் கவுண்டர் ஆவர்.
வாரண வாகன னோஎன மன்னர் மனமதிக்கும்
காரண வான்வணங்காமுடிக் கட்டி கனத்தபடை
பூரண வாகினி யுஞ்சிரம் தாழப் பொருதுவென்ற
வாரண வாசி வளர்பூந் துறைகொங்கு மண்டலமே!
என்பது வாரணவாசி பற்றிய பாடலாகும்.
அகளங்கச் சோழன் முன்னிலையில் தமிழ்ப் புலவர்களை விரும்பி அழைத்து அவர்களுக்குத் தேவாமிர்தம் போன்று உணவளித்துப் பொன்னும் வழங்கி அனுப்பியவன் பூந்துறைக் கனகசெல்லன் என்றும் காடைகுல வள்ளல்.
ஆடையும் முத்தும் அணிமார்ப சோழன் அகளங்கன்முன்
மேடை புகழ்ந்து வரும்புல வோரை விழைந்தழைத்துக்
காடை குலாதிபன் பூந்துறை நாடன் கனகசெல்லன்
மாடையுந் தெய்வ அமுதளித் தான்கொங்கு மண்டலமே!
என்பது மற்றொரு சதகப் பாடலாகும்.
புகழ் மொழிகளால் அறிவன:
அன்னதரு வான பார்பதி நகருக்கு
அதிபன் என வந்த சுமூகன்
அரசர்மனம் மகிழவரும் காடைகுல மேரு!
அன்புபெறும் காடைகுல செல்வா ரணவாசி
அடையவர் பணிசிங்கம்.
வல்லோனாம் காடைகுல வன்மையுளான்!
வன்னிப்பூ பதியுதன செல்லயன் காடைகுல மகராசர்.
இதுபதியில் அரசுபுரியும்
பொன்னின் மேழிக்கதிபர் செங்குவளை அணிமார்பர்
பூமிபாலகா ஆனவர்
போதமிகும் காடைகுல மகராசர் வாழ்கின்ற
புகழ்பெருக காணி!
சொல்லு ரண்டு உரையாத பழனிமக ராயனே!
தாரணி மதிக்கும் தண்டிகைத் துரையான
வாரண வாசி
இப்பாடலில் அதிபன், பகைவர் பணியும் சிங்கம், இமயம் போன்றவர், வல்லோன், மகராசன், அரசு புரிபவர், அதிபர், பூமிபாலகர், தண்டித்துறை, சிந்தாமணி போன்ற சொற்களால் இவர்கள் அரசர் போல் அதிகாரம் செலுத்திய தன்மை புலப்படுகிறது. படைச் சிறப்புடன் கொடைச்சிப்பும் உடையவர்ள் காடைகலத்தினர்.
இவர்கள் அரசர்க்கு உதவி ஆற்றல்மிகு படைகொண்டு வாழ்ந்தாலும் கொங்கு மக்களுக்கு இனியவர்கள் என்பதை.
காருலவும் இனிதான் காடைகுலர்,
அன்பு பெறும் காடைகுலம்!
போன்ற தொடர்கள் மெய்ப்பிக்கின்றன.
அட்டமங்கலம் பெற்ற அவிநாசி :
காடைகுல வாரணவாசிக் கவுண்டர் மகன் அவிநாசிக் கவுண்டர் மீது ஒரு புலவர். அட்டமங்கலம், என்னும் இலக்கியம் ஒன்றைப் பாடியுள்ளார். அந்நூல் கிடைக்கவில்லை. ஆனால் அந்நூலின் சிறப்புச் செய்யுள் ஓர் ஓலையில் கிடைத்துள்ளது.
வாரணவாசி மன்னன் மைந்தன் அவி நாசிமால்மேல்
ஆரணம்சேர் அட்டமங்க லத்தமிழ்க்குக் காரணம்சேர்
சங்கரற்கு முன்பிறந்த தற்பரனா னந்தவெளி
கங்ûசுதன் செஞ்சரம் காப்பு
என்பது அப்பாடலாகும். இப்பாடல் விநாயகர் காப்பாகும். இவ் வரணவாசியும் அவிநாசியும் ஆத்தூரோடு தொடர்புடையவர்கள் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.
வசீகரமான ஒரு வண்ணம் :
வண்ணம் என்பது தமிழச் சந்தப் பாடல் வகைகளில் ஒன்று. பாடுதற்கு அரியது. இசைப்பதற்கு மிகவும் ஏற்றது. அட்டமங்கலத் தமிழ்பெற்ற அதே அவிநாசிக் கவுண்டர் மீது இவ்வண்ணம் பாடப்பட்டுள்ளது.
வாரிதி யானகாடை வாழ்குல னானதீபன்
வசீகர மானகொங்கு வளநக ரேபுரந்து
வாரண வாசிசேனை வாரண வாசியான
வாரண வாசிசேயன் வாழ் அவி நாசிராயன்
வாசமிகு பூந்துறையைச் வறையார் !
என்பது அவ் வண்ண இலக்கியத்தில் ஒரு பகுதியாகும். காடை குலத்தை வாரிதி (கடல்) என்றும் அவிநாசியைத் தீபன் என்றும், அவன் கொங்கு (தாராபுரம்) நகர் காப்பவர் என்றும் கூறுப்பட்டுள்ளது. வாரணவாசி என்று பெயர் நயமுடன் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது.
வான்புகழ் வாரணவாசி :
ஓர் ஓலையில் தனிப்பாடலின் பகுதி கிடைத்துள்ளது. அப்பாடலில் காடைகுல வாரணவாசி பல்படப் புகழ்ந்து பாராட்டப்பட்டுள்ளார். அவர் புலவர்கள் புகழும் பூந்துறை நாட்டுக்குரியவர். பவைகவர் பணியும் சிங்கம், அவர் பொய்யுரையாத அரிச்சந்திரனுக்கு நிகரானவர். தருமன் போன்றவர் என்று புகழ்ந்துரைக்கப் பெறுகிறார் வாரணவாசி.
தண்டமிழப் புகழ்பரபு பூந்துறைந் னாடனைத்
தரியவர் பணிசிங்கனை
சான்று மொழிதனில் அரிச்சநிதிரனைக் காடைகுல
தருமனைப் போகநிதியை
தெண்டிரை செகுத்துலவு கொங்கு மண்டலத்த்திலுயர்
தீரன்வா ரணவாசியை
அண்டபசி ரண்டம் பலகோடி உண்டாக்கி
உள்ளதுள அணுவாகியும்
ஆனந்த மயமதாய்ச் சராசரம் படைத்திடும்
அயன்றா லிருக்குமணியை
பண்டுலவு கருதி ஆ மகப்பொருள் தலைவியைப்
பாவாணர் குலதேவியை
படிகநிற வாணியைப் பூரண புராரியைப்
பரிவுடன் வழுத்தல் செய்வோம்!
வாரணவாசிக் கவுண்டரைக் காக்க எல்லாத் தெய்வங்களையும் வேண்டி விரும்பிப் பாடுகிறார் புலவர்.
பள்ளிபூத்துப் பண்பாளர் :
பூந்துறையின் தெற்கே அரச்சலூர் செல்லும் வழியில் உள்ளது பள்ளியூத்து, அங்குள்ள காடைகுலத்தினா அப் பூந்துறைக்கு உரியவர்கள். அவர்களில் குப்பண கவுண்டர் மகன் மொகணக்கவுண்டனர் ஒருவர். அவரைப் பற்றிப் புலவர் புகழ்ந்து பாடிய பாடலில் ஒரு பகுதி மட்டும் கிடைத்துள்ளது.
பூந்துறை நாட்டினில் காடைகுலம்
பண்பன் குப்பணதுறை பாலன்
மொகவணேந்தி !
இந்திரனுக்குச் சமமானவர் என்று மோகவண கவுண்டரைப் பற்றி கூப்பட்டுள்ளது.
காரையூர் உறவினர் காசிலிங்கம்
வாரணவாசி என்பது போலக் காசிலிங்கம் என்பதும் காசியின் தொடர்பான சிறப்புப் பெயராகும். பூந்துறை நாட்டுக்கு அதிபதியாகக் காடை குலக் காசிலிங்கம் பூந்துறையில் வாழ்ந்து வந்தார். அவர் பழையகோட்டைப் பட்டக்காரர் அவர்களைச் சொந்த மாமனாக்கிக் கொண்டவர்.
முந்து பூந்துறை நாட்டுக்கு அதிபதி
முக்கியன் என்னும் காடை குலாதிபன்
இந்திரன் காசிலிங்கம் அந்த நத்தக்
காரையூரினுக் குதாரனாம் சர்க்கரை மன்றாடியை
சொந்த மாமன் எனப் படைத்தோன்
என்பது இதைக் குறிக்கும்.
காவியம் கண்ட காவலர்
பூந்துறையில் விக்கினங்கள் தீர்க்கும் விநாயகனைப் பிரதிட்டை செய்து காடை விநாயகர் என்று பெயர் வைத்த சிறப்புக்குரியவர்கள் காடை குலத்தினர். காசி அவிநாசியோடு தொடர்புகொண்டு பக்திப் பெருக்கெடுத்த காடை குலத்தினர் தங்கள் ஊருக்கென்று, பூந்துறைப் புராணம், என்னும் காவியத்தை உருவாக்கினர்.
திருச்செங்கோடு மண்டகப்பாளையம் செம்புக்காளி பிள்ளை என்னும் கருணீகர் குலச்செம்மல் மகனாகத் தோன்றி வடமொழியும், தமிழும் கசடறக் கற்ற பெயரும் புலவர் காளியண்ணக் கவிராயரைப் பரிசோதனை பல செய்து பூந்துறைக்கு அழைத்து வந்தார். காடைகுல வாரணவாசிக்கவுண்டர்.
7 சருக்கங்களையும் 228 பாடல்களையும் உடைய அழகிய வரலாற்றுச் சிறப்புமிக்க பூந்துறைப் புராணம் பாடி முடித்த காளியண்ண கவிராயருக்கு 50 ஏக்கர் பூமி அளித்துப் பெரும் சிறப்புச் செய்து பூந்துறை அருகில் உள்ள தொட்டிபாளையத்தில் குடி அமர்த்தினர். அவ்வூர், புலவன் தொட்டிபாளையம், என்றே அழைக்கப்பட்டது. இன்றும் ஞானசம்பந்தபுரம் என்னும் பகுதியில் அவர்தம் வாரிதாரர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல்துறைப் பேராசிரியரும், ஈரோடு கொங்கு ஆய்வு மைய அமைப்பாளரும் ஆகிய புலவர் செ.இராசு, கோபி கலைக்கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கா.அரங்கசாமி ஆகியோர் இதன் பதிப்பாசிரியர்கள் ஆவர்.
கொங்கு காணியாள பட்டயம் :
கொங்கு வேளாளர்கள் கொங்கு நாடெங்கும் குடியேறி நாடு நகர் பிரித்துக் குலம் கோத்திரம் பிரித்துக் காணிகள் ஏற்படுத்தித் தங்கள் வேளாண்மைக்கும் சமூக வாழ்விற்கும் குடிபடைகளை அமர்த்தியதை விரிவாக கூறும் பட்டயம் இது.
சேரன் பாண்டியன் பணகன்
செங்கோல் பெரியவன் செம்பவளன்
தூரன் ஆந்தை காடைகுலம்
துலங்கு முடியன் ஓதாளன்
எனத் தொடங்கும் பாடலில் காடைகுலம் குலத்து அடைமொழியோடு மிகவும் சிறப்பாகக் குறிக்கப்படுகிறது.
குடிகளின் கூட்டத்தில் கடைகுலத்துச் செங்ககாளியப்ப கவுண்டர், உருமாண்ட கவுண்டர், புள்ளாச்சிக் கவுண்டர், பழனிச் சாமிக்கவுண்டர், ஏலப்ப கவுண்டர், அழகுநாச்சி ஆகியோர் கலந்து கொண்டதாக அப்பட்டயம் கூறுகிறது. இப்பட்டயத்தின் ஓலைப்படி ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் உள்ளது.
பெரியணன் குறவஞ்சி
வெள்ளோடு பெரியண கவுண்டர் மீது பாடப்பட்ட குறவஞ்சி பெரியணன் குறவஞ்சியாகும். இந்நூலில் வாரணவாசி, அழப்பிச்சராயன், பெரியதம்பி, நல்லமுத்து, நஞ்சயன், அவிநாசி, காசிலிங்கம் ஆகிய காடைகுலத் தலைவர்கள் புகழ்ந்து கூறப்பட்டுள்ளனர்.
………… வேந்தனாம் காடை
கோத்திரம் இனிய கீர்த்தி விலாசன்
வாரண வாசிமால் சீரணி தமிழ்க்கு
மாணிக்கம் ஈந்த பூணிக்கை யாளன்
தளகர்த்த ரான அழப்பிச்ஃச ராயன்
தெரிவையர் மகிழும் பெரியதம்பி மகிபன்
வல்லமைக்கு இனிய நல்லமுத் தேந்திரன்
வஞ்சகர் குடோரி நஞ்சய ராயன்
தவமனம் இனிய அவிநாசிம் மகிபன்
வல்லமைக்கு இனிய நல்லமுத்தேந்திரன்
வஞ்சகர் குடோரி நஞ்சய ராயன்
தவமனம் இனிய அவிநாசி மகீபன்
வாசமே குலவும் காசிலிங் கேந்திரன்
என்பது காடைகுலத் தலைவர்களைப் புகழும் பகுதியாகும்.
அக்குறவஞ்சியில் குறத்தி தான் பெற்ற பரிசுகளைக் குறவனிடம் வருணிக்கும்போது மேல் கூறப்பட்டவர்களில் வாரணவாசி, நல்லமுத்து ஆகியோர் கொடுத்த பெருங்கொடைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றாள்.
தென்னவன் காடைகுல தீரன் வாரணவாசிக்கு
உன்னிதமாய் மூலிகை உண்மையாய்க் கொடுத்தேன்
பத்தமாய் ஆயிரம்பொன் நன்பதக்கம் கொடுத்தான்
வித்தகர் புகழும் நல்லமுத்து விசையனுக்கு
பண்பாய் முகவசியப் பச்சிலை கொடுத்தேன் அம்மே
அன்பாய் என்னையே மெச்சி அட்டிகை கொடுத்தான் அம்மே
என்பது காடைகுலத்தார் கொடை கொடுத்த பதக்கம், அட்டிகை பற்றிய பாடல் பகுதியாகும்.
வரலாற்று ஆவணங்களில் காடைகுலம்
கொங்குநாட்டில் வரலாற்று ஆவணங்கள் பல பற்பல காலங்களில் எழுதப்பட்டுள்ளன. அவை செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மற்றும் காகிதங்கள் ஆகியவற்றில் எழுதப்பட்டுள்ளன.
கொங்கு வேளாளர்களிடையிலும், வேறு சமூகத்தாருடனும், புலவர்கள், குருக்கள் பற்றியும், மக்கள் குடியேற்றம் பற்றியும், கோயில் விழாக்கள் பற்றியும் அந்த ஆவணங்கள் எழுதப்பட்டுள்ளன.
முகுந்தநல்லூர்ப்பட்டயம் திருவாச்சிச் செப்பேடு
பட்டாலிக் கிரையப் பட்டயம் நல்லூர் கிரையப் பட்டையம்
பிராரியூர்ப் பட்டயம் கத்தாங்கண்ணிப்பட்டயம்
கொங்கபு புலவர் பட்டயம் குறுப்புநாட்டுச் செப்பேடு
காங்கய நாட்டுப் பட்டயம் தென்பரை நாட்டுப் பட்டயம்
பாசூர்ச் செப்பேடு தென்னிலைச் செப்பேடு
நாணபுரம் செப்பேடு ஈங்கூர்ச் செப்பேடு
பெருந்துறைச் சேப்பேடு ஈஞ்சகுலச் செப்பேடு
ஆகிய ஆவணங்களில் காடை குலத்தாரின் சிறப்பும், பெருமையும் கூறப்படுகின்றன. இவைகளில் கையொப்பமிட்ட கொங்கு வேளாண் பெருமக்களில் காடை குலத்தார் முதல்வராகக் காணப்படுகின்றனர்.
கொங்கு நாடெங்கும் பல்கிப் பரவியுள்ள காடைகுல பெருமக்களின் பெயர்கள் மேற்கண்ட ஆவணங்களில் காணப்படுகின்றன. அவைகளை கீழே காணலாம்.
முகுந்தநல்லூர்ப் பட்டயம்
விசயநகர மன்னர் ஆட்சிக்காலத்தில் செல்வம் மிக்க எழுமாத்தூர்ப் பனங்காடை குலத்தினரில் சோழியாண்டாக் கவுண்டர் தென்குறுப்பு நாட்டு முகுந்த நல்லூரத (இன்றைய சர்க்கார் பெரிய பாளையம்) ஆயிரம் பொன் கொடுத்து கொங்கச் செட்டியாளர்களிடமிருந்து விலைக்கு வாங்கிக் காணி ஏற்படுத்தினார்.
இப்பட்டயத்தில் முதலில் சாட்சிக் கையொப்பமிட்டவர் காடை குலத்தில் அவிநாசி முத்தணகவுண்டர் என்பவர் ஆவார்.
திருவாச்சி செப்பேடு :
பெருந்துறையை அடுத்துள்ள சின்னியம்பாளையம் சி.என்.வெள்ளியங்கிரி அவர்களிடம் இச்செப்பேடு உள்ளது. மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பரஞ்சேர்வழி ஓதாளகுலத்துக் காளியப்ப கவுண்டர், அவர் மைத்துனன் வெள்ளக்கோயில் ஆந்தை குலத்துச்சென்னிமலைக் கவுண்டர் ஆகிய இருவரும் மேய்ச்சல் பட்டிக்காகப் பூந்துறை நாட்டுத் திருவாச்சிக்கு வந்து கொங்கச் செட்டியிடமும், பூவாணி வேட்டுவரிடமும் 1500 பொன் கொடுத்துத் திருவாச்சிக் கிராமத்தை விலைக்கு வாங்கிய செய்தி இச்செப்பேட்டில் கூறப்படுகிறது. இதில் முதல் சாட்சிக் கையொப்பம் இட்டவர் காடைகுலக் கவுண்டர் என்பவர் ஆவார்.
பட்டாலிக் கிரையப் பட்டயம் :
08.04.1672 ஆம் ஆண்டு தீரன் சின்னமலை வெள்ளையரை எதிர்க்கும் தன் முயற்சிக்கப் போர்ப்பயிற்சி அளிக்கவும். ஆயுதங்கள் தயாரிக்கவும் சிவன்மலைச் சார்பில் பட்டாலியில் அனுந்தக்கவுண்டர் என்னும் வேட்டுவகுலக் கவுண்டரிடமிருந்து நிலத்தை விலைக்கு வாங்கினார்.
இந்த ஆவணத்தில் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளவர்களில் முதலாவதாகக் காடைகுலக் காசிலிங்கக் கவுண்டர் என்பவர் குறிக்கப்பட்டுள்ளார்.
நல்லூர்க் கிரையப் பட்டயம் :
ஆத்தூர் பனங்காடை குலத்தாரில் சோழியப்ப கவுண்டர் தன் கால்நடைகளுடன் பொன்குலுக்கி நாட்டைச் சேர்ந்த நல்லூருக்கு வந்தார். கொங்கச் செட்டிகள் மதுரை நாயக்கருக்குக் கீழ் அப்பகுதியை ஆண்டு வந்தனர். பொன்குலுக்கி நாட்டில் அந்த ஆவணம் எழுதப்பட்டாலும் காடைகுல வாரணாசிக் கவுண்டர் அதில் சிறப்பாகச் சாட்சிக் கையொப்பம் இட்ட பெருமக்களில் குறிக்கிப்படுகிறார். இப்பட்டய நகல் கொடுமணல் வி.இராமசாமிக் கவுண்டர் அவர்கள் வசம் உள்ளது.
பிடாரியூர்ப் பட்டயம்
சென்னிமலையை அடுத்த கூரபாளையம் பூசாரியார் கந்தசாமிக் கவுண்டர் அவர்கள் வசம் ஒரு செப்பேடு உள்ளது. தலையநல்லூர்க் கூறை குலத்தினர் பிடாரியூரில் காணி பெற்ற வரலாற்றை அச்செப்பேடு கூறுகிறது. காடைகுல வாரணவாசிக் கவுண்டர் அதில் சாட்சிக் கையொப்பமிட்ட பெருமக்களில் ஒருவராகக் குறிக்கப்படுகிறார்.
கத்தாங்கண்ணிப் பட்டயம் :
கத்தாங்கண்ணி கற்றறிந்த புலவருக்கு கொடையாகக் கொடுக்கப்பட்ட ஊர். அங்கு வாழ்ந்த கண்ணகுலத்துச் செங்கோட்டு வேலப்பகவுண்டர் இக்கரைக் கத்தாங்கண்ணி சிவந்தி குலத்துத் தீத்தாக்கவுண்டரின் வெள்ளைப் பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு காணி பெற்றார்.
இத்திருமண ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பெருமக்களில் காடைகுலத்து முத்தய கவுண்டர் என்பவர் குறிக்கப்படுகிறார்.
கையொப்பமிட்டவர்களில் காடைகுல வாரணாசிக் கவுண்டர் என்பவர் குறிக்கப்பட்டுள்ளார்.
குறுப்பு நாட்டுச் செப்பேடு :
குறுப்பு நாட்டுப் புலவர் நியமனம் பெற்ற இப்பட்டயத்தில் அவினாசி முத்தண கவுண்டர் என்னும் காடைகுலப் பெருமனார் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளார்.
இவ்வரலாற்று ஆவணங்கள் காடை குலப் பெருமக்களுக்கு பூந்துறை நாடு, காங்கேய நாடு, வாழவந்தி நாடு, பொன்குலுக்கி நாடு போன்ற பிற நாடுகளில் செல்வாக்கும், பெருமையும் இருந்ததை நன்கு புலப்படுத்துகிறது.
காங்கய நாட்டுப் பட்டயம் :
காங்கேய நாட்டுப் பட்டக்காரர்கள் முன்னிலையில் கீரனூர்க் காணியாளர்கள் ஆதி, அந்துவன், காடை, கீரை, விலையன், தேவேந்திரன் குல்த்தினர் கூடித் தங்களுக்கென்று சென்னிமலைப் புலவன் என்பவரைப் பால் சாப்பிடும் உரிமையுடைய குலப்புலவராகவும், கீரனூர்க் காணியாளராகவும் நியமித்தனர்.
இப்பட்டயத்தில் கீரனூர்க் காடைகுல வெள்ளைக் கவுண்டர், முத்துப் பெரியண கவுண்டர் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். இன்று கீரனூரில் மூன்றாவதாகக் குறிக்கப் பெறும் காடை குலத்தினர் இப்பட்டயத்தில் இரண்டாவதாகக் குறிக்கப்படுகிறன்றார். இப்பட்டயம் ஈரோடு கலைமகள் அருகாட்சியகத்தில் உள்ளது.
தென்கரை நாட்டுப் பட்டயம்
புதுப்பைப் புலவர் வீட்டிலிருந்து பெற்ற இவ்வோலைப் பட்டயம் தமிழ் பல்கலைக்கழக ஒலைச்சுவடித் துறையில் உள்ளது. விசய நகர மன்னன் அச்சுதராயர் ஆதிக்கத்தை எதிர்த்த குழுவில் பூசகுலம், சேரிலான் குலத்தோடு காடைகுலத்தாரும் இணைந்த செய்தி இப்பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது விசய நகரத்துச் சிறையிலிருந்து காடை குலத்தாரின் வீர வரலாறு இதில் விரிவாகப் பேசப்படுகிறது.
பாசூர்ச் செப்பேடு :
கொங்கு வேளாளர்கள் பலருக்குக் குலகுருவாக இன்றும் விளங்குபவர்கள் பாசூர் தீட்சிதா மரபினர். அகிலாண்ட தீட்சிதர் எனும் மரபுப் பெயரை உடைய அவர்கள் திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் இப்போது திருமடம் அமைத்து நாள்தோறும் காணியாளர்கள் நலன் குறித்து வழிபாடு நடத்தி வாழ்ந்து வருகிறார்கள். பாசூர் மடம் அங்கு வடக்கு ரத வீதியில் இரண்டு உள்ளன. காடைகுலத்தார்தான் அகிலாண்ட தீட்சிதருடைய முதல் சீடராகச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளனர். சின்னத் தம்பிக் கவுண்டர், நல்லதம்பிக் கவுண்டர், சின்ன விநாயகக் கவுண்டர், செல்லப்பகவுண்டர், நல்லே கவுண்டர், பழனிக்கவுண்டர், கருப்பணகவுண்டர் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர்.
தென்னிலைச் செப்பேடு :
தென்னிலை வேட்டுவப் பட்டக்காரர் அமரர் எம்.ஏ.பகவதிக் கவுண்டர் வீட்டில் இச்செப்பேடு உள்ளது. கொங்கு நாட்டின் பல கிராமங்களும், கோயில்களும், ஊர்க் காணியும் வேட்டுவக் கவுண்டரிடமிருந்து வேளாள கவுண்டர்களுக்கு மாறுவதை இச்செப்பேடு மிக விரிவாகக் குறிக்கிறது. வேட்டுவ கலப் பட்டக்காரர் வீட்டில் இரண்டு செப்பேடுகள் உள்ளன. வேட்டுவர்களும், வேளாளர்களும் பலர் சாட்சியாகக் கூறப்பட்டுள்ளனர். காடை குலத்தினருக்கு இராசமுப்பாடு, கோயில் முப்பாடு ஆகியன ஆத்தூரில் கொடுத்ததை இச் செப்பேடு கூறுகிறது.
நாரணபுரம் செப்பேடு :
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இச்செப்பேட்டைப் பெற்று 1910 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் அளவீட்டுத்துறையின் கல்வெட்டுப் பிரிவினர் படி எடுத்துள்ளனர் வாரக்க நாடு பல்லடம் கஸ்பா நாரணபுரம் அங்காள பரமேசுவரிக்குப் புதிய கொடைகள் அளிக்கப் பெற்றதை இச்செப்பேடு கூறுகிறது. சாட்சிக் கையொப்பம் இட்ட பெருமக்களில் காடைகுலம் பொன்னக்கவுண்டர் என்பவரும் காணப்படுகிறார்.
ஈங்கூர்ச் செப்பேடு :
பெருந்துறைக்கு அருகில் சீனாபுரம் போகும் வழியில் கட்டப்பட்ட ஒரு விநாயகர் கோயில் தொடர்பாக மடத்துப்பாளையம் காடை குலத்திற்குள் சிறு தகராறு ஏற்பட்டுத் தீர்த்து வைக்கப்பட்டதை இப் செப்பேடு கூறுகிறது. காடை கூட்டம் என அழைக்கப்பட்டவர்கள ;சற்று கீழனாவர்கள் ன்றும் கூறுகின்றன. காடை கூட்டம் பெயர்பொறிக்க வேண்டிய இடத்தில் காடான் கூட்டம் பெயர் பொறித்ததால் அக்கோயில் காடை கூட்டத்தாரால் இடிக்கப்பட்டது.
வழக்கை பூந்துறை மணியம்பாளையம் பெரிய கவுண்டிச்சி தெய்வானையம்மாள் விசாரிக்கின்றார்கள். அவர் அளித்த தீர்ப்பின்படி காடான் கூட்டத்தூர் முழு அபராதம் செலுத்த முடியாமல் ஓடிப்போய்விடுகின்றனர். அப்பணம் ஈங்கூர் லஞ்சங் கூட்டம் தம்பிராட்டிக் கவுண்டர் வசம் கடன் வாங்கி ஈடு செய்யப்படுகிறது. இச்செப்பேட்டில் பெருந்துறை மடத்துப்பாளையம் காடை குலத்தார் பழனிக்கவுண்டர், அவர் தம்பி செல்லக்கவுண்டர் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர். காடான் கூட்டம் என்ற பெயரில் செல்லி மகன் நாச்சிமுத்தன் என்பவர் குறிக்கப்படுகிறார்.
பெருந்துறை செப்பேடு
இச்செப்பேட்டில் வெள்ளை வேட்டுவன், சிவப் பிராமணன். கொங்கச் செட்டி ஆகியோரிடமிருந்து படை வீட்டு மேத குலத்தார் பெருந்துறையை விலைக்கு வாங்கிய விபரம் கூறப்படுகிறது. பின்னர் நசியனூர் கண்ண குலத்தில் தோன்றிய செங்கோடன் நல்லதம்பிக் கவுண்டர் மகள் ஆயி அம்மாறை புந்துறைக் காடைகுல வாரணவாசிக் கவுண்டர் மகன் தம்பி நல்லைய கவுண்டருக்குக் கொடுக்க காடை குலத்தாருக்குப் பெருந்துறைக் காணி கிடைத்த விபரம் இச்செப்பேட்டில் உள்ளது.
பெருந்துறைச் காணிக்காகக் காடைகுலத்தார் காங்கேயம் அகத்தீசர் கோயிலில் மழு எடுத்து வெற்றி கொண்ட செய்தியும், மேதி குலத்தாரோடு காடைகுலத்தார் அண்ணன்-தம்பிபேல ஒற்றுமையாக வாழ்ந்து அறச்செயல்கள் விபரமும் கூறப்படுகிறது. காடை குலத்தார் மழு எடுத்து வென்ற செய்தி ஒரு தனிப்பாடலிலும் குறிக்கப்பட்டுள்ளது. அப்பாடல் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஈஞ்ச குலச்செப்பேடு
கொத்துமுடிப் பாண்டியனும், சேரனும் வேட்டுவர்களை வென்று அதிகாரம் பெறும் ஊர்களையெல்லாம் கொங்கு வேளாளர்கட்குக் காணியாக்குவதாகக் கூறினர். கொங்கு வேளாளிரில் ஈஞ்சங் கூட்டம் இரகுநாதசிங்கிக் கவுண்டர் தாம் வென்ற 88 ஊர்களைக் காணியாகப் பெற்றார்.
இதைக் குறிக்கும் செப்பேட்டில் காடை கூட்டம் காசிலிங்கக் கவுண்டர் கையெழுத்திட்டுள்ளார். அவரை இச்செப்பேடு பட்டக்காரன் என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது. இச்செப்பேடு, பட்டயங்கள் புலவர் செ. இராசு தொகுத்துத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள், என்னும் நூலில் உள்ளன. விரிவான செய்திகளை அங்கு காணலாம்.
காடைகுலக் கல்வெட்டுக்கள்
பழங்காலத்தில் கோயிலுக்குக் கொடுத்த கொடைகளைக் கல்வெட்டாகப் பொறித்து வைத்தனர். அதனால் அவை இன்றும் நின்று நிலவிக் கொடை அளதித்தவர்கள் பெயரை விளங்கச் செய்கிறது. காடைகுலப் பெருமக்களைக் குறிக்கும் சில கல்வெட்டுக்களை இங்கே காணலாம்.
வள்ளி எறிச்சல் கல்வெட்டு :
காங்கேய நாடடு வள்ளி எறிச்சில் ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற பேரூர், வள்ளி, வள்ளி நகர் என்றும் சறிப்பிக்கப்படுவது. அங்குள்ள மாத்தீசுவரர் கோயிலில் மகாமண்டபத் தூண்களில் சில கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு கல்வெட்டுக்கள் காடை குலத்தார் திருப்பணியைக் குறிக்கிறது. அக்கல்வெட்டுக்களின் காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு ஆகும். ஏறக்குறை ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரேஅரசனிடம் பட்டமும், பதவியும் பெற்று உயர்நிலையில் காடை குலத்தார் கொங்கு நாட்டில் சிறப்புற்கு விளங்கியமை அக்கல்வெட்டால் தெரிகிறது.
அ) கொங்கு வேளாளரில் சிற்றிலோடு என்னும் ஊரைச் சேர்ந்த காடை குலத்தூரில் ஆடன்புளியன் என்றும் இயற்பெயர் உடைய உத்தம சோழத் தமிழ்வேளான் என்பவர் இத்தூணை அளித்தார் என்பதை ஒரு தூண் கல்வெட்டு கூறுகிறது.
ஆ) மற்றொரு கல்வெட்டு கொங்கு வேளாளரில் காடை குலத்தைச் சேர்ந்த மாராயன் தென்னவன் மூவேந்த வேளான் என்பவர் ஒரு தூண் அளித்ததாக கூறுகிறது.
உத்தமசோழன், தென்னவன் மூவேந்த வேளான் என்பவை அரசரால் அளித்த பட்டப் பெயர் ஆகும். மாராயன் என்பது அரசரால் செய்யப்படும் சிறப்பு.
தமிழ்வேளான் என்ற பெயரைக் காடை குலத்துச் செம்மல் ஒருவன் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு வைத்துக் கொண்டதால் காடை குலத்தாரின் தமிழ்ப்பற்று நன்கு விளங்குகிறது. வள்ளி எறிச்சல் காடை குலத்தாரின் காணிப்பாடல்களில் சிறப்பிடம் பெறுகிறது.
விசயமங்கலம் கல்வெட்டு
வரலாற்றுச் சிறப்பு மிக்க விசயமங்கலத்தில் உள்ள சிவபெருமானுக்கு நாகீசுவரர் என்று பெயர். அந்நாகீசுவரத்தில் திருவிளக்கு ஏற்றும் புண்ணியத்தைக் கொங்கு வேளாளரில் காடைகுல அவிநாசி என்பவரின் மனைவி தேவன் சொக்கி என்பவள் பெற்றாள் என்பதை அக்கோயில் கல்வெட்டு கூறுகிறது.
ஸ்வஸ்தீஸ்ரீ விக்கிரமசோழ தேவற்கு யாண்டு
பதின் ஒன்றாவது……………. நாட்டு இளம்பள்ளியில்
வேளாளரில் காடைகளில் அவிநாசி தேவன்
மனைக்கிழத்தி
தேவன் சொக்கியேன் விசயமங்கலத்து ஆளுடையார்
திருநசீச்சரமுடையார்க்கு சந்தியாதீய விளக்
கொன்றுக்கு ஒடுக்கின ஸ்ரீயக்கி பழங்சலாகை
அச்சு ஒன்று கைக்கொண்டோம் ஆத்ரேய
கோத்திரத்து ஆளவந்த பிழைபொறுத்தான் பட்டனும்
இவ்விளக்கொன்றும் சத்திராதித்தவரை குடங்கொண்டு
கோயில்புகுவான் எரிக்கக் கடவானாகவும்
என்பது அக்கல்வெட்டு.
பூந்துரைக் கல்வெட்டுக்கள்
புகழ்மிக்க பூந்துறையில் புட்பவனநாதர் கோயிலில் பல கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றில் இரண்டு கல்வெட்டுக்களில் காடைகுலத்தார் பெருமையும், அவர்கள் செய்த திருப்பணியும் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளன.
அ. கொடிக்கம்ப கல்வெட்டு :
கலியுக சகாப்தம் 4889ஆம் ஆண்டு (கி.பி. 1788) சார்வதி வருடம் மாசி மாதம் புந்துறைக் காடைகுலம் வாரணவாசிக் கவுண்டர் மக்ன காசிலிங்கக் கவுண்டர் கொடிக்கம்பம் உபயமாக ஏற்படுத்தியதை இக்கல்வெட்டுக் தெரிவிக்கின்றது.
ஆ) பாகம்பிரியாள் அம்மன் கோயில் வடபுறச் சுவர்க் கல்வெட்டு
1) ஸ்ரீசுபமஸ்து மகாமண்டலேசுரன் சுதாசிவராயர்க்கு சேகபிராத இராமராசாவின் காரியத்துக்கு கர்த்தரான் நஞ்சையைத் திம்மப்பன் அவர்கள் இராசராசபுரத்தில் இராச்சியம் பண்ணியருளிய காரியத்துக்குக் கர்தரான் சங்கப்பன் நின்று காலத்து ஆனந்த வருறும் ஆவணி மீ முதல் தயதி உ மேல் க.
2. சைப் புந்துறை நாட்டு பூந்துறையில் மேலைக் காடைகளில் குப்பன் அழைப்பித்தான் புற்பவனநாதர் பாகம் பிரியாதார்கு திருக்கோயில் மார்த்தாண்னும் வசவப்பனும் இந்த மண்டபம் செய்தமைக்கு திருப்பேற்று சோழியப் பிராமணன் பூந்துறையில் கணக்குத் திருமலைநாதன் தீத்தான் வாழ்து உ.
ஈரோடு கல்வெட்டு
ஈரோட்டில் உள்ள பள்ளிகொண்டருளிய பெருமாள் கோயில் கல்வெடடில் கொடை ஒன்றுக்குச் சாட்சிக் கையெழுத்திட்ட பெருமக்களில் முதலாவதாகக் காடைகுல அப்பையன் எழுத்து என்ற பெயர் காணப்படுகிறது.
ஈரோடு திருத்தொண்டீஸ்வரர் கோயிலில் வீரவல்லாளதேவன் என்ற போசள மன்னன் கல்வெட்டில் காடை குலத்தவர் கையொப்பம் இட்டுள்ளனர்.
வெள்ளோட்டுக்கல்வெட்டு
வெள்ளோடு சர்வலிங்கேசுவரர் கோயிலில் உம்மாத்தூர்த் தலைவன் வீரநஞ்சராசன் காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. பூந்துறை நாடடு 32 ஊரவரும் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர். முதலாவதாகக் கையெழுத்திட்டவர் வெள்ளாளன் மேலைச் சாகாடைகளில் அப்பியான் எழுத்து என்ற தொடர் காணப்படுகிறது.
கீரனூர்க் கல்வெட்டு :
கங்கேய நாட்டுக் கீனூர் காணியாளர்கள் கொங்கு வேளாளர்களில் ஆதி. அத்துவன், காடை, விலையன், தேவேந்திரன், கீரை குலத்தைச் சேர்ந்தவர்கள், இக்காணியாளர்கள் ஆறுபேரும் சேர்ந்து தங்கள் குலதெய்வம் செல்வநாயகியம்மனுக்கு அளித்த கொடையில் காடைகுலம் சார்பாக இராக்கியார் என்வர் ûகெயழுத்திட்டுள்ளார்.
சுவடியில் ஒரு பொறிப்பு :
தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை புதுப்பைப் புலவர் வீட்டு ஓலைச்சுவடிகளில் ஒரு பகுதியைப் பெற்றுள்ளது. அத்தொகுதி ஐந்தாம் பகுதியில் 2307ஆம் எண் இட்டது ஓர் எண்சுவடி எடு. அதாவது அகரவரிசை எழுதப்பட்ட ஏடு. அந்த ஏட்டை எழுதியவர் செங்குந்த குலத்தில் முத்துசாமி வாத்தியார் என்பவர். அதில் :
ராட்சத வருடம் தை மாதம் 1ந் தேதி
சரவணக் கவுண்டர் வலசிலேயிருக்கும்
காடைகுலம் பெரியண கவுண்டர்
குமாரன் சவின்மலைக் கவுண்டருக்கு
எழுதிய எண்சுவடி!
என்று காணப்படுகிறது. காடைகுலத்தாரின் கல்வி ஆர்வம் இதன்மூலம் புலப்படுகிறது.
காடைகுலத் தலைவர்கள்
அ) வரையாப் புகழ்கொண்ட வாரணவாசி :
வரலாற்றுப் புகழ்பெற்ற காடைகுப் புகýக்குக் காரணமாக விளங்கிய பெருமக்கள் பஷ்ர். வள்ளல்கள் என்றும், மகராசர் என்றும், அதிபர், மேலு எனப் புகழப்பட்ட காடைகுலத்தார் பேரரசர்களால் சிறப்பிக்கப்பட்டவர்கள். படைபல நடத்தி வெற்றிவாகை குடியஹ்ர்கள் மேழிக்கொடி ஏந்தியஹ்ர்கள். செங்குவளை மாலை அணிந்து அன்னக்கொடி கட்டிப் புலஹ்ர்க்கும், ஏழையர்க்கும், இரவலர்கட்கும் வாரிவழங்கிய வள்ளன்மை உடையவர்கள். அஹ்ர்களில் வாரணவாசியும், குப்பிச்சியும் மிகபுகழ் வாய்ந்தவர்கள்.
வாரண வாசி – பெயர்ச் சிறப்பு :
வாரணவாசி என்பது காசியின் பழம் பெயர் வாரணவாசி என்ற பெயரே பனாரஸ் எனத்திரிந்தது. சங்க காலம் தொடங்கி காசி தமிழர்கட்குத் தெரிந்த ஊஜ்ôகவே இúந்தது. கலித்தொகை அறுபதாம் பாடலில் வாரணவாசிப்பதம், என்பது குறித்துக் கபிலர் பேசுகிறார்.
கொங்கு வேளாளர்கள் பஷ்ர் காசி யாத்திரை சென்று கொங்கு நாடு வந்து காசி விசுவநாதரையும், விசாலாட்சியையும் எýந்தருளச் செய்துள்ளனர். பலர் கங்கையாடி என்றும், üüகாசிக்குப் போய்வந்தýý என்றும் தம் பெயருடன் முன் அடைமொழியைச் சேர்த்துக் கொண்டனர்.
இதுமட்டுமல்ல, கொங்குநாட்டிலும் ஒரு காசியை ஏற்படுதினர். திருமுரகன் பூண்டிக் கிரைய சாசனம் அவிநாசித்தலத்தைக் கொங்கு வாரணவாசி, என்று சிறப்புடன் அழைக்கிறது. அப்பட்டயம் அவிநாசியைக் கந்தமாபுரிக்குச் சேர்ந்த தேவஸ்தானம் காசியிலும் வாசி தெட்சினகாசி அவிநாசி கொங்கு வாரணவாசித் சõர்வேதிமங்கலம், என்று குறிக்கிறது.
காசித்திருத்தலத்தின் பெயரான வாரணவாசி என்ற பெயரையும் கொங்கு வாரணவாசியான அவிநாசியின் பெயரைûயும் காடைகுலப் பெருமக்கள் இன்றும் சிறப்புடன் பஷ்ர் தம் பெயராகச் சூட்டிக்கொண்டிருப்பது பெருமை மிக்க செயலாகும். வாரணவாசிக் கவுண்டர். அபிநாசிக் கüண்டர் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்கள் நாடாளும் தலைவர்களாகவும் ஊராட்சி செய்து உஸ்ர் அலுவலர்களாகவும் அண்மைக்காலம் வரை விளங்கி வருவதையும் காணுகிறோம்.
காடை குஷ்த்தாருக்குரிய பூந்துறை பட்வனேசுவரர் கோயிலில் காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மன் படிமங்கள் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன.
வழிவழி வந்த பெயர் :
வாரணவாசி என்ற பெயரைக் காடை குலத்தினர் பலர் வைத்துக்கொண்டிருந்ததை கொங்கு நாட்டு ஆவணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. காளிங்கராயன் அணைகட்டிய பட்டயம், முத்தூர் பட்டயம், முடிவாண்டிப் பட்டயம், திருவாச்சி செப்பேடு, நல்லூரி கிரயப் பட்டயம், பிடாரியூர் செப்பேடு கொங்குப் புலவர் பட்டயம், கண்ணகுலப் பட்டயம், பாசூர்ச் செப்பேடு, அனுப்பப் பட்டிச் செப்பேடு. மதுக்கரைப் பட்டயம், அனுமன்பள்ளி பட்டயம் போன்றவற்றில் காடைகுல வாரணவாசிக் கவுண்டர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ள சிறப்பைப் காணுகிறோம்.
கெட்டி முதலியுடன் போர் :
காடைகுலத்தலைவர் வாரணவாசி தாரமங்கலம் கெட்டி முதலியாரோடு செய்த போர் வரலாற்றுப் புகழ் மிக்கது. கெட்டி முதலி ஆற்றல் மிக்கவன். சங்ககாலத்திலிருந்து தலைவர்களாக விளங்கும் குடும்பத்தில் தோன்றியவன். சேலம் மாவட்டத் தாரமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மரபைச் சேர்ந்தவன். அந்தியூர், அத்தானி, பவானி, திருச்செங்கோடு, அமரகுத்தி, ஒமலூர், தாரமங்கலம் போன்ற இடங்களில் அவர்கள் கோட்டைகளையும், சிற்பப் பணிகளையும் கல்வெட்டுக்களையும் காண்கின்றோம்.
பிறரை வென்ற கெட்டி முதலியார் மரபில் தோன்றிய வணங்காமுடிக் கட்டி பூந்துறை வாரணவாசியிடம் வணங்க வேண்டிதாயிற்று.
மாற்றலர்மண் கொள்ளும் வணங்கா முடிகட்டிக்
ஆற்றஅழிந் தேங்கி அடங்கினான் – தாற்ற ரம்பைப்
பூங்கனித்தேனி பாய்மருதப் பூந்துறையான் சேனைமதில்
பாங்குருத்துச் செய்கொடுமை பார்த்து
என்ற வெண்பா இதனை விளக்கும்.
இந்திரனோ என எண்ணப்பெறும் வணங்காமுடிகட்டியின் பெரும்படை பூந்துறை காடைகுல வாரணவாசியில் வெற்றி கொள்ளப்பட்டது. இழ்னை கொங்கு மண்டல சதகம் :
வாரண வாகன னோஎன மன்னர் மனமதிக்கும்
காரண வான்வணங் காமுடிக் கட்டி கனத்தபடை
பூரண வாகினி யும்சிரம் தாழப் பொருதுவென்ற
வாரண வாசி வளர்பூந் துறைகொங்கு மண்டலமே
எனப் புகழ்கிறது.
எல்லை பிரித்த ஏந்தல்
மதுக்கரைச் செல்லப்பாண்டியம்மன் கோவிலில் மூவேந்தர் கூடி எல்லை பிரிக்க முயன்றபோது ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்த்து சுகமாக எல்லைச் சண்டையைத் தீர்த்து வைத்தவர் ஒரு வாரணவாசிக் கவுண்டர்.
ஆ) குப்பிச்சி என்னும் குணக்குன்று :
கி.பி.16 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் நம் கொங்கு நாட்டின் ஒப்பற்ற பெரும் வீரனாகத் திகழ்ந்தவர் காடைகுலச் செம்மல் குப்பன் அழைப்பித்தவன். இப்பெயர் அழைப்பிச்சாக் கவுண்டர், குப்பன் அழைப்பிச்சான், குப்பிச்சி, மாட்டையாக் குப்பிச்சி என்றெல்லாம் பல இடங்களில் பல்வேறு வகையில் குறிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சிறப்புக்களுக்குரிய வகையில் பெருவாழ்வு வாழ்ந்த சிறப்புக்குரியவர் குப்பிச்சி. ஏழையர்க்கு இரங்கிய ஏந்தலாகவும், புலவரை ஒத்துக் கவிபாடிய புகழோராகவும், மல்யுத்தத்தில் தேர்ந்த மாவீரராகவும், அடங்காத குதிரையை அடக்கிய அடலேறாகவும், பேரரசர்களால் சிறப்பிக்கப்பட்ட பெரியோராகவும் கொங்கு வரலாற்றில் இவர் பெயர் சிறப்பிடம் பெறுகிறது. சேமூரில் வீற்றிருந்தருள்புரியும் காடை குலப் பெருமக்களின் காவல் குலதெய்வமான குப்பயணன் என்ற பெயரே குப்பன் என்று அமைந்தது.
வெள்ளோடு கருவலிகேசுவரர் கோயிலில் குப்பன் அழைப்பிச்சான் பாட்டு கலம்பகம் என்ற தலைப்பில் ஒரு கல்வெட்டுப் பாடல் பொறிக்கப்பட்டுள்ளது. இப்போது படிக்க இயலாத நிலையில் அக்கல்வெட்டு முற்றிலும் பொரிந்துவிட்டது. இதன் அருகே வெளிப்பக்கம் ஒரு வெண்பா பொறிக்கப்பட்டுள்ளது. அகத்துறையாக அமைந்துள்ள அப்பாடலும் அக்கம் பக்கத்திற்கு உரித்தாக இருக்கலாம்.
காப்பை இடுங்கள்இக் காமவேள் வாராமல்
காப்பை மிகத்தேடும் தையலீர் – கோப்பன்
தருமருதன் வெள்ளோடைத் தான்புர னூரில்
வருமிரவு நேரே மதி !
என்பது அப்பாடலாகும். கோப்பன் என்பவனின் மகன் மருதன் வெள்ளோட்டுத் தலைவனாக உள்ளதை இப்பாடல் உணர்த்துகிறது.
விஜயநகரத்தில் காட்டிய விவேகம் :
தாரமங்கலம் கெட்டி முதலிகளின் ஆதிக்கம் காவிரிக்கு மேற்கில் குறிப்பாகப் பூந்துறை நாட்டில் பரவுவதைக் காடைகுலத் தலைவர்கள் விரும்பவில்லை. விசய நகர மன்னர்களின் அன்பும், படைபலமும், ஆதரவும் பெற்றுக் கெட்டி முதலிகள் ஆதிக்கத்தை அகற்ற விரும்பினர்.
காடைகுலக் குப்பிச்சு இதன் பொருட்டு விசயநகரம் சென்றார். உடன் கற்பூரச் செட்டிகள் என்னும் உப்பிலிய நாயக்கர் இளைஞன் வீரன் நல்லயன் துணையாகச் சென்றான்.
விசய நகர மன்னன் அஜ்ண்மனையின் வாயிலில் ஒர பெரும் மல்லன் நின்று கொண்டிருந்தான். அவன் இடக்காலில் சங்கிலி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதன் முனை வாயிலின் எதிர்ப்பக்கம் மேலே கட்டப்பட்டு இúந்தது. அஜ்ண்மனையின் உட்செல்வோர் அச்சங்கிலியின் கீழ் நுழைந்து பணிந்து வணங்கிச் செல்லவேண்டும். இல்லாவிடில் மல்லனை வென்று செல்லலாம்.
சங்கிலியின் கீழ்ப் பணிந்து செல்வதை அவமானமாகக் கருதிய காடைகுலக் குப்பிச்சி அம்மல்லனோடு போரிட்டு அவனைப் புறமுதுகு காட்டச் செய்து குப்புற வீழ்த்திவிட்டு பெருவீரனாக ஏறுபோல் அரண்மனையின் உட்சென்றான். மன்னன் குப்பிச்சிக்குப் பாராட்டுகளும், பரிசும் தந்தான். இதனை காடைகுல அவிநாசிக் கüண்டர் வண்டுவிடு தூது.
விசய நகரத்து மேவி இருக்கும்
அசையா நரபதிதன் அன்பால் – இசைவுபெறக்
கொங்குக்கு மேன்மைக் குறிப்பு மணியிழைத்த
தங்கப்பொன் தண்டிகையைத் தான்படைத்தோன் !
என்று பாராட்டுகிறது.
விசயநகர அரசனிடம் அடங்காக் குதிரை ஒன்றிருந்தது. அதனை மசக்குதிரை என்றழைப்பர். எவருக்கும் அடங்காத அக் குதிரையை அடக்கினால் மேல் கொங்கு நாட்டு அதிகாரம் அளித்துப் படைஉதவியும் அளிப்பதாக விசயநகர அரசன் குப்பிச்சியிடம் கூறினான்.
குப்பிச்சி குதிரை ஏற்றத்தில் ஓரளவு வல்லர்தான். ஆனால் விசயநகரத்து மசக்குதிரை அதன்மீது ஏற்யவர்களை நேராகக்க கொண்டு சென்று அருகிலுள்ள நீர்நிலையில் தள்ளிவிடும். இதைக் கேள்விப்பட்ட குப்பிச்சி மிகவும் கவலை கொண்டார். பயணம் வீணாகிவிடுமோ என்று அஞ்சினார்.
இதனையறிந்த உப்பிலியகுல நல்லயன் ஒரு தந்திரம் செய்தான். சுண்ணாம்புக் கற்களை வாங்கிச் சீராக உடைத்து சாக்குப்பைளில் கட்டி மசக்குதிரையின் அடிவயிற்றில் பரவலாகக் கட்டி விட்டான். தண்ணீருக்குள் பாயும் குதிரையிலிருந்து விழாமல் இருக்குமாறும், குதிரை தண்ணீருக்குள் சென்றவுடன் அடங்கிவிடும் என்றும் குப்பிச்சியிடம் கூறினான்.
குப்பிச்சியை ஏற்றிக்கொண்டு தலைதெறிக்க ஓடிய மசக்குதிரை தண்ணீருக்குள் பாய்ந்தது. தண்ணீர்பட்ட சுண்ணாம்பு அடி வயிற்றைப் புண்ணாக்கியது. உடனே குதிரை அடங்கியது. நகரத் தெருக்களில் குப்பிச்சியின் விருப்பப்படி ஓடியது. இறுதியில் குப்பிச்சி மசக்குதிரையை அரசன் முன்கொண்டு வந்தார்.
குப்பிச்சியின் மிக ஆற்றலையும், தீரத்தையும் கண்ட விசயநகர மன்னன் மகிழ்ந்து மேல் கொங்குத் தலைவனாக்கிக் குப்பிச்சிக்குத் தேவையான படை பலமும் தந்தான். இச்சிறப்புகளைக் கொங்கு மண்டல சதகம் பின்வருமாறு புகழுகிறது.
தேசுற் றிலகு விசய நகரத் திறல்அரசன்
வாசர் பணிக்கனை மண்கௌவக் குத்திஅம் மன்னனைக்கண்டு
ஏசற் படும்மச மாவினை ஆட்டி எவரும்மெச்ச
மாசற்ற நாடுகொள் குப்பிச்சி யும்கொங்கு மண்டலமே
என்பது அப்பாடல்.
நன்றிக்கடன் :
விசயநகர மசக்குதிரையை அடக்கியதால் குப்பிச்சி அரசன் ஆதரவு பெற்றான். அடங்காக்குதிரை அடங்க ஆலோசனை நல்கி வழிகாட்டியவன் பூந்துறை கற்பூரச் செட்டிகுல உப்பிலிய நாயக்க இளைஞன் நல்லயன்.
நல்லயன் தனக்குச் செய்த இந் நன்றிக்காக அச்சமுதாயத்திற்கு ஒரு சிறப்புச் செய்தான் குப்பிச்சி.
தமிழகத்து உப்பிலி நாயக்கர்கள் ஒன்று கூடவும், அவர்தம் நியாயங்கள் பேசவும் பூந்துறையில் அழகிய கல்மேடை ஒன்றைக் கட்டிக்கொடுத்தான். பூந்துறையில் அரச்சலூர் செல்லும் பாதையில் மேல்புறம் அகன்றதோர் அழகிய இடத்தில் நியாய மேடை இன்றும் நிலவி நமக்கு காட்சி அளிக்கிறது. குப்பிச்சியின் கொடைத் திறத்தைப் பறை சாற்றி விளங்குகிறது. அங்கு உப்பிலி நாயக்கர்கள் அமர்ந்து நியாயம் பேசும் எவர் வந்தாலும் எழுந்து மரியாதை செலுத்த வேண்யதில்லை என்றும் குப்பிச்சி நிர்ணயம் செய்தான்.
அம்மேடையைச் சுற்றி இவ்வரிய நிகழ்ச்சி சிற்பமாகத் தீட்டப்பட்டுள்ளது. மேலபுறம் :
முப்பாட்டு ரங்கப்ப நாயக்கன்
அடைப்க்காரன் பெரியண நாயக்கன் !
என்ற கல்வெட்டும் காணப்படுகிறது.
உப்பிலிய நாயக்கர் சமூகத்தினர் சிங்காதனக்கல் என்று அம்மேடையை அழைக்கின்றனர். 25.12.1966 இல் குருமந்தூரில் கூடி சமூக மாநாட்டில் பூந்துறை சிங்காதனக் கல்லைப் பராமரிக்கவும், திருப்பணி செய்யவும் குழு அமைக்கப்பட்டது. உப்பிலிய நாயக்கர் சமூகத்தினர் இப்போது தம் பழம் பெருமைக்கேற்ப அம்மேடை பற்றிய நற்காரியங்களில் ஈடுபடுவது மகிழ்ச்சிக்குரியது.
வாழ்க குப்பிச்சியின் புகழ் !
மன்னர் மதித்த மாண்பாளர்கள்
üüபூந்துறை நாடு அதிகம்ýý என்றும் üüபழம்பூந்துறைýý என்றும் பாவலர்களால் சிறப்பிக்கப்பட்டது காடைகுலக் காணியான பூந்துறை. அரிய ஆட்சிச் சிறப்பு அங்கு நடைபெற்றது.
கொங்கு நாட்டுப் பாளையக்காரர், பட்டக்காரர் வீட்டு இளைஞர்கள் தம் பொழுது போக்குக்காகவும், வீர விளையாட்டக்காகவும் அடிக்கடி காடைகுலத்தாரின் பூந்துறை வந்து பொழுது போக்குவர் என்று சில தனிப்பாடல்கள் கூறுகின்றன.
கேரள தேச வரலாறு, என்னும் பழஞ்சுவடி ஒன்று சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கீழ்த்திசை மொழிகளின் சுவடி நூலகத்தில் உள்ளது. அது கேரள மாநிலத்தின் (பண்டைய சேரநாடு) பண்டைய வரலாற்றுச் செய்திகளை அடக்கிய சிறந்த வரலாற்று நூலாகும்.
சேரமான் பெருமாள் நாயனார் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர நாட்டை ஆட்சிபுரிந்தவர். சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தவர்; அவர் நணபர். அவர் சேரநாட்டின் ஆட்சிபுரியும்போது கிருஷ்ணராயர் என்பவரின் படையெடுப்புக்கு எல்தராக போர்புரியப் பூந்துறை என்னுமிடத்திலிருந்து மானீச்சன். விக்கிரமன் என்ற இருவரையும் அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கிற உண்ணிகுமார நம்பியாரையும் சேரநாட்டுக்கு அழைத்துச் சென்ற செய்தி அந்நூலில் கூறப்படுகிறது.
மானீச்சன், விக்கிரமன் இருவரும் üüஏராடிமார்ýý அல்லது ஏர் உழும் உழவர்கள். என்று அதில் கூறப்படுகிறது. பூந்துறை மானீச்சனுக்கு குன்னக் கோனாத்ரி என்று பட்டமும் கொடுத்துக் கள்ளிக்கோட்டைக்கு அரசர் ஆக்கினார். விக்கிரமனைக் கள்ளிக்கோட்டைக்கு இளையராஜா ஆக்கி இளங்கூறு நம்பியாதிரி திருமூலப்பாடு என்று பெயரிட்டார். இவர் பந்நியங்கரையிலே இருந்தார்.
இவர்கள் வழியினரே கள்ளிக்கோட்டை அரசர் மரபினராக சாமூரின் அரசர் பரம்பரையினர். இன்றும் சாமூரின் அரச குடும்பத்தாருக்குரிய பல பட்டப் பெயர்களில் முதலாவதாக விளங்குவது பூந்துறைக் கோன் என்ற பட்டப்பெயராகும். பூந்துறைத் தலைவர் அல்லது அரசர் என்பது இழ்ன் பொருள்.
4.02.1980ல் கள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் திரு. இராகவவாரியார் தம் கடிதம் ஒன்றில் சாமூரின் குடும்பத்தினர் காவிரிப் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பூந்துறைக்கு உரியவர்கள் தர்ஸ்டன் புந்துறை சேலம் மாவட்டத்தைச் சார்ந்தது என எழுதியுள்ளார். என்று கூறியுள்ளார்.
அனேகமாகக் கேரள வரலாற்றாசிரியர்கள் அனைவரும் கள்ளிக்கோட்டை சாமூரின் அரசர் குடும்பத்துக்கும் கொங்கு நாட்டுப் பூந்துறைக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்.
சிலர் கள்ளிக்கோட்டை அருகில் இன்று பூந்துறை என ஓரிடத்திற்குப் பெயர் வைத்து அதனையே பூந்துறை என்று கூறுகின்றனர். அப்பூந்துறை என்ற பெயரம் கொங்கு நாட்டுப் பூந்துறை நினைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று கேரள வரலாற்று ஆசிரியர் திரு. இராகவ வாரியார் அவர்கள் கருதுகிறார்கள். மெக்கன்சியின் ஆவணங்களில் ஒன்றில்
பூர்வத்தில் சேர ராசா பூந்துறைப் பட்டணம்
வாசஸ்தராயி ராச்சியாதி பத்தியம் பண்ணிக்
கொண்டு வருகுற நாளையில்,
என்று கூறுப்படுகிறது.
பூந்துறைக் காடைகுல நண்ணாவுடையார் என்பவருக்குச் சேர சோழ பாண்டியர் மூவரும் முடிசூட்டினர் என்பது பழம்பாடல்.
நாவேந்து பூந்துறை நண்ணா வுடையார்க்கு
மூவேந்தர் சூட்டும் முடி.
என்பது அப்பாடல் பகுதி. ஒருவேளை சேரமான் பெருமாள் பூந்துறை இளைஞர்கட்கு முடிசூட்டியபோது பாண்டியனையும், சோழனையும் அழைத்திருக்கலாம் என்பது அதன் கருத்தாகலாம்.
கேரளோற்பத்தி, என்னும் பழஞ்சுவடி நூல் கள்ளிக்கோட்டை சாமூரின் மன்னரின் முன்னோர் பெருமாள் அரசர் (சேரமான் பெருமாள்) தலயாத்திரை மேற்கொள்ளும்úபொது பூந்துறை ஏராடி இளைஞர்களிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்ததாகக் கூறுகிறது. இதனை கே.பி. பத்மநாபமேனன் தம் கேரள வரலாறு என்னும் நூலில் ஆதரித்து எழுதியுள்ளார்.
பூந்துறையைப் பற்றிய ஒரு புராண நூல் உண்டு. அது காளியண்ணப் புலவர் பாடியது. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் பெரும் புரவராக விளங்கிய அவரைப் பூந்துறைக்கு அழைத்து வந்து புலவன் தொட்டிபாளையத்தில் குடியமர்த்தி 50 ஏக்கருக்கு மேல் நிலக்கோட்டை அளித்து பூந்துறைப் புராணம் பாடுமாறு செய்தனர் காடை குலத்தினர்.
அந்நூலில் காடை குல நண்ணாவுடையார் மரபைச் சேர்ந்த வேளாண்குல இளைஞர் வேல்ப்ப நயினார் என்பவர் சேர மன்னனுடன் தலைநகர் திருவஞ்சைக் களம் சென்று சேர மன்னனால் முடி சூட்டப்பட்டமை கூறப்படுகிறது.
மன்னுசிவ மறையோர்கள் தம்மைக் கவி
மண்மகள்புத் திரர் எங்கே என்று கேட்க
உன்னுபசி யால்உலந்து நோயால் வாடி
உறுதொண்டை நாட்டினிலே உற்றத்தார் என்றார்
பின்னுநண்ணா உடையான்தன் மரபில் வந்த
பெயர்பெற்ற வேலப்ப நயினான் என்போன்
குன்றனைய தோளினான் சேரன் தன்னைக்
கூடினான் திருவஞ்சைக் களமே சென்றான்
ஆங்கவற்குத் தன்முடியை சூட்டிப் பின்னர்
அவனியெல்லாம் ஒருகுடைக்கீழ் அரசாய் ஆள
என்பது அப்பகுதி, மானீச்சன், என்ற பெயர் வேலப்ப நயினார், என்று மாறியுள்ளதே தவிர வரலாற்று நிகழ்ச்சிகள் எதுவும் மாறவில்லை என்பது இங்கு நோக்கத்தக்கது.
பூந்துறைப் புட்பவனநாதர் கோயிலில் அம்மன் சந்நிதி சுற்றுச்சுவர் கல்வெட்டு இந்நிகழ்ச்சியைக் குறிப்பாகச் சுட்டுகிறது என்று கூறுகிறார். பூந்துறைக் காணியாளரும் ஆய்வாளரும் ஆகிய முனைவர் கா. அரங்கசாமி அவர்கள்.
கொங்கு வேளாளர் காணிப்பாடல்களில் வேளாளர்கட்கு உரிமையான பகதிகள் பல கூறுப்படுகின்றன. அதில் ஒரு பாடலில்
நல்ல மலையாளம் நாடுகொச்சி கொல்லம்
கோழிக்கோடு கோடுவாய் பாலக்காடு.
பட்டாம்பி என்றும் பரவைநதி யார்பிறந்த
எட்டாறு சூழலகம் ஈந்தனர்கான்.
என்றெல்லாம் கூறப்படுவதைக் காண்கிறோம். கேரளாவின் பல பகுதிகள் கொங்கு வேளாளர் காணி ஊர்களாகக் கூறப்பட்டுள்ளன. இவை மேற்கண்ட காடை குலத்தாரின் சேரநாட்டு ஆட்சியுரிமை உறுதிப்படுவதைக் காணுகிறோம்.
வாகை சூடிய வழக்குகள்
காடைகுலத்தார் பிறந்த மண்ணின் மீது பாசம் மிகவும் உடையவர்கள், நாட்டுப் பற்று மிக்கவர்கள் அரசரிடம் வழக்கினை உரைத்தோ அல்லது தெய்வீக சக்தியாலோ, சிலமுறை காடைகுலத்தினர் சில வழக்கில் வெற்றிவாகை சூடியுள்ள நிகழ்ச்சிகள் இலக்கியங்கள் மூலமாகவும், செப்பேடு மூலமாகவும் நமக்குத் தெரிகிறது.
காங்கேய நாட்டுடன் எல்லைப்போர்
1617ஆம் ஆண்டு மதுரை நாயக்க மன்னன் முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கொங்குத் தாராபுரம் சீமையில் காங்கேய நாட்டுப் பழைய கோட்டைப் பட்டக்கார் சீமையான காரையூருக்கும், மேல்கரைப் பூந்துறை நாட்டு அரச்சலூருக்கும் எல்லைத் தகராறு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றின் அருகில் இரண்டு ஊர்களும் உள்ளன. கறுத்து மாறுபாடு ஏற்பட்டு அது சண்டையில் முடிந்தது.
பட்டக்காரர் வஞ்சியங் குளத்திலும், அரச்சலூரார் சேனாதிபதி பாளையத்திலும் தங்களுடைய படை ஆட்களைக் காவலுக்கு நிறுத்தினர். சண்டை ஏற்பட்டு இருதரப்பிலும் பலர் இறந்தனர். இதைக்கண்ட மதுரை நாயக்கர் அரசு அலுவலர்களும், மற்றும் தலைவர்கள் சிலரும் மேற்கண்ட எல்லைத் தகராரைத் தீர்த்து வைத்தனர். ஒப்பந்தமும் கையெழுத்தானது.
தாராபுரம் நாயக்கமன்னர் அதிகாரி திம்மப்ப முதலியார் யானைமேலும், மற்றவர்கள் குதிரைமேலும் ஏறிக்கொண்டு போய் எல்லை நிர்ணயம் செய்தனர். பூந்துறை நாட்டு ஊரார் வேளாளர், வேட்டுவர் ஆகியோர் கையொப்பமிட்ட ஓலையைப் படடக்காரருக்குக் கொடுத்தனர். இவ்வோலைப் பட்டயம் பூந்துதறை நாட்டார் மேலோலை என்று வழங்கப்படுகிறது.
இவ்வழக்கில் முக்கியமானவராக விளங்கி நியாயம் தீர்த்து ஓலையில் முதலில் கையொப்பமிட்டுள்ளவர் காடை குல அளப்பிச்சாக் கவுண்டர் என்பவர், இவர் பெயர் குப்பன் அழைப்பித்தவன் என்று ஒரு ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது.
பெருந்துறையில் நடந்த நிகழ்ச்சி :
பெருந்துறை பூந்துறை நாட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த பழம்பெரும் பேரூர். பெருந்துறையின் காணியாளர்கள் கொங்கு வேளாளரில் மேதி குலத்தாரும், காடை குலத்தாரும் ஆவர். மேதி குலத்தார் நாமக்கல் மாவட்டப் படை வீட்டிலிருந்தும், காடை குலத்தார் நசியனூர் கண்ண குலத்தார் வீட்டில் பெண் எடுத்தும் சீதனமாகவும் பெருந்துறை காணியையும் பெற்றனர்.
மேதி குலத்தாருடன் இணைந்து அண்ணன் தம்பி போலப் பெருந்துறையில் காடை குலத்தார் வாழும்போது காகத்து வேட்டுவ குலத்தாரில் பெரியண்ணன் பெருந்துறை தங்களுடைய காணியூர் என்று கூறினர். வழக்கு கொங்கு 24 நாட்டுச் சபைக்குச் சென்றது. காங்கேயம் அகத்தீசுவரன் கோவிலில் கொங்கு நாட்டுச் சபை கூடியது. 24 நாட்டிலிருந்தும் பிரதிநிதிகள் கூடியிருந்தனர்.
சுப்பராய அப்பாச்சி, கடையூர்ப் பொருளந்தை குலக் காங்கேய மன்றாடியார், பழைய கோட்டை பயிரகுலக் கொற்றவேல் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார், காங்கேயம் செங்கண்ண குலப் பல்லவராயக் கவுண்டர், தென்கரை நாட்டுப் பட்டக்காரர் பெரியகுல வேணாடுடையாக் கவுண்டர், வெள்ளோடு பயிரகுலம், சாத்தைதந்தை குலத்தைச் சேர்ந்த பழனிக்கவுண்டர், காலிங்கராயக் கவுண்டர் ஆகியோரும் அச்சபையில் முதன்மையாக இருந்தனர். இரு சாராரும் தத்தம் வழக்கைச் சபையின் முன் உரைத்தனர்.
பெருந்துறைக் காடை குலத்து இளைஞன் ஒருவன் காங்கேயம் அகத்தீசுவரன் சன்னதியில் காய்ச்சிய மழூ எடுத்துப் பெருந்துறை தங்களுடைய காணியூர் என்று நிரூபித்து வெற்றி கண்டார்.
தலையநல்லூரில் பெற்ற வெற்றி :
தலையநல்லூர் என்பது இன்றைய சிவகிரியாகும். மேல்கரை அரைய நாட்டின் தலைநகர்
அரைய நாட்டுத் தலைய நல்லூரின் எல்லையில் உள்ள ஊர் பூந்துறை நாட்டுக் காகம் ஆகும். ஒரு முறை பூந்துறை நாட்டுக் காகத்து எல்லையை மேல்கரை அரைய நாட்டுத் தலையநல்லூர் ஊரான் தங்களுடையது என்று கவர்ந்து கொண்டனர். அவ்வெல்லை காகம் கிராமத்துக்கே சொந்தமானது. அப்போது வீரப்ப நாயக்கர் என்பவர் மதுரையில் ஆட்சி செய்து கொண்டிருந்தார். இரு ஊருக்கும் உள்ளூர் பகை இருந்தது.
காகம் எல்லையை மீட்கப் பூந்துறை நாட்டுத் தலைவர்களான காடை குலத்தினர் முற்பட்டனர். அதற்கு வேட்டுவப் பெரியண்ணி, செல்லயன், விருமன் ஆகியோரும் உதவி புரிந்தனர். காகத்து மேட்டில் வேங்கஞ்சுனை சூழ்ந்த சுருங்கரடு எல்லை பூந்துறை நாட்டுக் காகத்துக்கு உரியது என்று தாராபுரம் அகத்தீசர் சன்னதியில் மழு எடுத்து மீட்டவர்கள் பூந்துறை நாட்டுக் காடை குலத்தார். காடை குலச் செல்லப்ப கவுண்டர் தம்பி எனக் செல்லக் கவுண்டர் இவ்வரிய காரியத்தைச் செய்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியை ஓலைச் சுவடியில் உள்ள ஒரு தனிப்பாடல் சிறப்புடன் விளங்குகிறது. இவ்வோலைச்சுவடு ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்படுகிறது.
சிலைமதன ரூபவீ ரப்பநா யக்கரசு
செங்கோல் செலுத்துநாளில்
திசையான காகத்து வேட்டுவப் பெரியண்ணன்
செல்லப்பன் விருமனுடனே
கலையாரு மேட்டுறை வேங்கஞ் சுனைசூழ்க்
கருங்கரடு உள்ளாகவே
காவேரி வாணியும் நொய்யல் சூழ் மேல்கரைப்
பூந்துறைசை நாட்டெல்லையை
சண்டைக ளாகவேதான்
தம்பிகனக செல்வன் காங்கேயம் அகத்தீசர்
சன்னதியில் மழு எடுத்தான்
மலையான கலியுகம் மூவாயிரம்தனில்
வந்தபவ வையாசியில்
மங்கலப் பரணியில் வென்றசெல்லப்பனே
வண்மையுள காடைகுலனே!
வழக்கென்று வந்தபோது ஊர்விட்டு ஊர் சென்று 24 நாட்டவர்களும், பாளையங்காரர்களும், அரச அலுவலர்களும் கூடியுள்ள பெரும் சபையில் வழங்குûத்து வெற்றி பெற்ற காடை குலத்துப் பெருமக்கள் நம் பாராட்டுக்குரியவர்கள்.
வழக்குத் தீர்ப்பதிலும் வல்லவர் :
காடை குலத்தார் வழக்கு விசாரித்து நீதி செலுத்திய நிகழ்ச்சி செப்போடு மூலம் தெரியவரும் செய்தியாகும்.
அவ்வாறு நீதி செலுத்திய காடைகுலத்துத் தலைவர்கள் சிலர் பெயரைப் பாலபாரதி முத்துச்சாமி அய்யர் பாடிய பாம்பண்ண காங்கேயன் குறவஞ்சியில் குறிக்கப் பெறுகின்றனர்.
ஓடை காத் திரமும் மாட சேத்திரமும்
மேடைசேர் பூந்துறைக்க ôடை கோத்திரத்தில்
அசைவிலாப் புகழ்சேர் விசயனே அனைய
மோகவனனுடனே விசுவன துரையும்
மத்தமுத் தயவும் வெற்றியும் குணமும்
வித்தையும் பெறுநல முத்தய வேளும்
வம்பவர்கள் பயந்து நிரம்பவும் நடுங்கிக்
கும்பிடு பெரிய தம்பி மகீபனம்.
மின்னிய பூந்துறை நாடன் காடைகுல
விசுவணன்!
சித்தசன் காடைகுல நல்லமுத்தேந்திர தீரன்!
என்பன பாம்பன காங்கேயன் குறவஞ்சி வரிகளாகும்.
உலகு போற்றும் ஓர் உன்னதச் செயல்
செயற்கு அரிய செய்தல் :
செயற்கு அரிய செய்வார் பெரியவர்! என்று கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகையார். சிறியர் செயற்குரிய காரியங்களைக் கூடச் செய்ய மாட்டார்களாம். எல்லோரும் செய்கின்ற சாதாரணமான செயல்களையே தாங்களும் செய்யாமல் அரியவற்றையே சான்றúôர் செய்வர். அரிய புகழை அதனால் பெறுவர். அவ்வாறு புகழ்பெற்ற அருளாளர் ஒருவர் காடை குலத்தில் தோன்றினார். அவர் பெயர் பூந்துறை வாரணவாசி
தகவல்பகிர்வு 
கணேஷ்  கொங்கு திருமண தகவல் மையம்
10/11 கருப்பணகவுண்டர் லேஅவுட் 2 வது வீதி
புதுராமகிருஷ்ணபுரம்
திருப்பூர் 641607
 website  ganeshkongumatrimony.com 
 Play Store link 👇👇👇https://goo.gl/fh9MiQ
Whatssup ல் தொடர்பு கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://wa.me/919025382525?text=ganeshkongumatrimony.com
ganeshkongumatrimony.com
தொடா்ந்து பதிவுகள் இந்ததளத்தில் மட்டுமே பதியப்படும் தாங்களே ஜாதகத்தை பதிவு செய்து கொள்ளலாம்.